உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்வாயில் செடி, கொடிகளை அகற்றி தண்ணீர் வீணாவதை தடுத்த ஊழியர்கள்

கால்வாயில் செடி, கொடிகளை அகற்றி தண்ணீர் வீணாவதை தடுத்த ஊழியர்கள்

பெங்களூரு: தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரு குடிநீர் வாரியம், அதிரடி நடவடிக்கை எடுத்து, பெங்களூருக்கு வர வேண்டிய தண்ணீர் வீணாவதை தடுத்தது.பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:காவிரியில் இருந்து, பெங்களூருக்கு தண்ணீர் வரும், நெட்டகல்லப்பா பகுதியின் முக்கியமான கால்வாயில், பெருமளவில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. தண்ணீர் பாய்ந்து செல்ல தடையாக இருந்தது. தண்ணீரும் வீணாகிறது. நகருக்கு வர வேண்டிய தண்ணீரின் அளவும், பாதியாக குறைந்தது.இது தொடர்பாக தகவல் கிடைத்ததால், சிறப்பு குழு அமைத்து கால்வாயில் செடி, கொடிகளை அகற்றி தண்ணீர் சரியாக பாய வசதி செய்யும்படி, குடிநீர் வாரிய தலைவர் உத்தரவிட்டார். இதன்படி ஊழியர் குழு அமைக்கப்பட்டது. குழுவினர், நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.இரவு 10:00 மணிக்கு துவங்கிய பணிகள், அதிகாலை 2:00 மணி வரை நடந்தது. ஊழியர்கள் பிரச்னையை சரி செய்தனர். இவர்கள் பணிகளை செய்திருக்காவிட்டால், பெங்களூருக்கு 1,000 எம்.எல்.டி., தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும். தற்போது 100 எம்.எல்.டி., தண்ணீர் மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகிப்பதில் ஓரளவு சிரமம் இருக்கும்.தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்கு, டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிப்போம். போர்க்கால அவசரத்தில் பணிகள் நடத்திய ஊழியர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.காவிரி நீர் மற்றும் போர்வெல் நீரை குடிநீர் நோக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வாகனங்கள் சுத்தம் செய்ய, தோட்டங்களுக்கு பாய்ச்சி வீணாக்க கூடாது. இத்தகைய தேவைகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ