உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களாவில் மது விருந்து பொறியாளர்கள் உற்சாகம்

அரசு பங்களாவில் மது விருந்து பொறியாளர்கள் உற்சாகம்

பாகல்கோட்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த வேளையில், பட்ட பகலில், அதுவும் அரசு பங்களாவில் அரசு பொறியாளர்கள், அலுவலகத்துக்கு செல்லாமல், மது அருந்திய சம்பவம், பாகல்கோட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டியில் அரசு பங்களா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் திடீரென சில அதிகாரிகள் உள்ளே புகுந்தனர்.சற்று நேரத்தில் வேறு சிலரும் உள்ளே சென்று, கதவை அடைத்து கொண்டனர். பின்னர், அனைவரும் சேர்ந்து நன்றாக மது அருந்தி, கும்மாளம் போட்டுள்ளனர். இதை உள்ளே இருந்த ஒரு ஊழியர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் பரவியது.அதில், மாவட்ட பஞ்சாயத்து பிரிவின் ஜமகண்டி உதவி செயல் பொறியாளர் எம்.எஸ்.நாயக், பொறியாளர்கள் ராமப்பா ராத்தோட், ஜெகதீஷ் நாடகவுடா, கஜானன் பாட்டீல், ஸ்ரீசை ல் ஹுகார் ஆகியோர் சோபா மீது அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை காண முடிந்தது.அருகில், ஒப்பந்ததாரர்கள் சாதகர், சீத்தல் ஹரிஜன் உட்பட ஆறு ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளுக்கு ஊற்றி கொடுத்து, அவர்களும் மது அருந்தி உள்ளனர்.இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்த உயர் அதிகாரிகள், அனைத்து பொறியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த வேளையில், பட்ட பகலில், அதுவும் அரசு பங்களாவில் அதிகாரிகள், அலுவலகத்துக்கு செல்லாமல், மது அருந்தி களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை