உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி?: தேர்தல் ஆணையம் விளக்கம்

இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி?: தேர்தல் ஆணையம் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இ.பி.எஸ்., தரப்புக்கு லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து பி.ஜெயநரசிம்மன் என்பவர் ஆர்.டி.ஐ.,யில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ‛‛ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் படியே சின்னம் ஒதுக்கப்பட்டது' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ஜ., கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் பலா பழச் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். இ.பி.எஸ்., இடம் உள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க பல்வேறு முயற்சிகளை பன்னீர் செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவர் முயற்சி எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.

ஆணைய விதிகள்

இந்நிலையில், இ.பி.எஸ்., தரப்புக்கு லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி? என பி.ஜெயநரசிம்மன் என்பவர் ஆர்.டி.ஐ.,யில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ‛‛ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் படியே சின்னம் ஒதுக்கப்பட்டது' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க பன்னீர்செல்வம் பல முறை நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay D Ratnam
மே 13, 2024 20:49

தமிழ்நாட்டில் கூலிக்கு கூவும் யுட்யூபர்களையும் மீடியாக்களையம் வைத்து ஷோ காட்டும் வேலையை பாஜகவும் திமுகவும் மன்னிக்க, அண்ணாமலை ரசிகர் மன்றமும் கட்டுமரக் கம்பெனியும் மூன்று வருஷமா செய்துகொண்டு இருக்கிறது அதிமுகவை குறைத்து மதிப்பிடவேண்டாம் எம்ஜிஆர் ஜெயலலிதா இரட்டைஇலை அதிமுக கொடி, இவை நான்கும் எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட் கட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகி நடுத்தெருவில் நிற்கிறார்கள் கட்சி லட்டு மாதிரி எடப்பாடி பழனிசாமியிடம் வந்துவிட்டது சரியான நேரத்தில் காலை சுற்றிய பாம்பை எடப்பாடி கழற்றி கடாசிவிட்டார் பாஜகவுக்கு கர்நாடகாவை தவிர தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை ராஜா இப்போ போட்டியே பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும்தான்


தாமரை மலர்கிறது
மே 13, 2024 18:46

இரட்டை இலைக்கு இது தான் கடைசி தேர்தல் அடுத்த தேர்தலில் அதிமுக பிஜேபியில் ஐக்கியமாகிவிடும் அதிமுக தலைவர்கள் தாமரையில் போட்டியிடுவார் இரட்டை இலையில் தாமரை மலர்ந்துவிட்டது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ