உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சிகள் மீது ஈஸ்வரப்பா பாய்ச்சல்

கட்சிகள் மீது ஈஸ்வரப்பா பாய்ச்சல்

ஷிவமொகா, - ''அரசியல் கட்சிகள், ஜாதி பெயரில் ஹிந்து சமுதாயத்தை உடைக்க முயற்சிக்கின்றன,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வை சுத்திகரிக்க வேண்டும் என விரும்பி, ஹிந்துத்வாவில் நம்பிக்கை உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக நின்றுள்ளனர். இம்முறை லோக்சபா தேர்தலில், என் வெற்றி உறுதி. முஸ்லிம் வாக்காளர்கள் விழிப்படைந்து, அதிக எண்ணிக்கையில் எனக்கு ஓட்டு போட்டுள்ளனர்.அரசியல் கட்சிகள் ஜாதி பெயரில், ஹிந்து சமுதாயத்தை உடைக்க முயற்சிக்கின்றன. ஷிவமொகாவில் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா, காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார், ஜாதி பெயரை கூறி ஓட்டு கேட்டனர். ராகவேந்திரா எனக்கு எதிராக, சதி செய்தும் அதிக ஓட்டு வித்தியாசத்தில், நான் வெற்றி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை