மேலும் செய்திகள்
பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு
15-Aug-2024
வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசிக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது, விவசாயிகளின் வருவாயையும்; ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை குறைத்ததாக இருந்தாலும் சரி; சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதாக இருந்தாலும் சரி. இந்த முடிவுகள் அனைத்துமே விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடும். இந்த முடிவுகள் அவர்களின் வருவாயை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
15-Aug-2024