| ADDED : மே 29, 2024 04:21 AM
ராம் நகர் : வீடு புகுந்து வாலிபரை கொல்ல வந்த கும்பல், தடுக்க வந்த தந்தையை கொலை செய்து தப்பி ஓடியது.ராம்நகரின் கனகபுரா டவுன் மாதவ் நகரில் வசித்தவர் குண்டய்யா, 45. இவரது மகன் ருத்ரேஷ், 21. இவரது நண்பர் அருண், 21. கடந்த மாதம் யுகாதி கொண்டாட்டத்தின்போது, மது விருந்து வைக்கவில்லை என்பதால், அருணை, ருத்ரேஷ் கத்தியால் குத்தினார். ருத்ரேஷை கனகபுரா போலீசார் கைது செய்து, ராம்நகர் சிறையில் அடைத்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு, ருத்ரேஷ் ஜாமினில் வந்தார். அவரை கொலை செய்ய அருண், நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் இரவு ருத்ரேஷ் வீட்டிற்குள், அருண், நண்பர்கள் மூன்று பேர் புகுந்தனர். ஹாலில் அமர்ந்திருந்த ருத்ரேஷை ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குண்டய்யா, மகனை காப்பாற்ற முயன்றார். இதனால் அவர் மீது அருணும், நண்பர்களும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பினர். தலையில் பலத்த காயம் அடைந்த குண்டய்யா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். ருத்ரேஷ் அளித்த புகாரில் அருண் உட்பட நான்கு பேரையும், கனகபுரா போலீசார் நேற்று கைது செய்தனர்.