உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி வீட்டில் தீ குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

அடுக்குமாடி வீட்டில் தீ குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள அங்காடிக்கடவு பகுதியில் அடுக்குமாடி வீடு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் பினிஷ் குரியன், 45, அனுமோல் மேத்யூ, 40, தம்பதி, தங்கள் குழந்தைகள் ஜோனா, 8, ஜெஷ்வின், 5, ஆகியோருடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை இரண்டாவது மாடியில் உள்ள படுக்கை அறையில் பினிஷ், குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பற்றி, மளமள என மற்ற அறைகளுக்கும் பரவியது.இதுபற்றி அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் பினிஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை