உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிந்தது முதல் கட்ட ஓட்டு பதிவு குமாரசாமி உட்பட பலரும் ரிலாக்ஸ்

முடிந்தது முதல் கட்ட ஓட்டு பதிவு குமாரசாமி உட்பட பலரும் ரிலாக்ஸ்

மாண்டியா, : கடந்த இரண்டு மாதமாக ஓய்வின்றி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள், முதற்கட்ட ஓட்டு பதிவு முடிந்ததால், நிம்மதியாக ஓய்வெடுக்கின்றனர்.முதற்கட்ட ஓட்டு முடிந்த லோக்சபா தொகுதிகளில், மாண்டியாவும் ஒன்றாகும். தலைவர்கள் பலரும்ஒன்றரை, இரண்டு மாதமாக ஓய்வின்றி பிரசாரம் செய்தனர். வெயிலை பொருட்படுத்தாமல், தொகுதியை சுற்றி வந்து பிரசாரம் செய்தனர். ஏப்ரல் 26ல் ஓட்டு பதிவு முடிந்த பின், ரிலாக்ஸ் மூடுக்கு சென்றுள்ளனர்.ஓட்டு பதிவுக்கு முன், வேட்பாளர்கள், தலைவர்களின் மொபைல் போன்கள் இடைவிடாமல் ஒலித்தன. தற்போது பலரின் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. சிலரின் போன் அடித்தாலும், எடுப்பது இல்லை. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளர்களும் கூட, தங்களின் குடும்பத்துடன் பொழுது போக்குகின்றனர்.காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு, இரண்டு மாதமாக தொடர் பிரசாரத்தில் இருந்தார். ஓட்டு பதிவு முடிந்த பின், பெங்களூரின், சஞ்சய்நகரில் உள்ள தன் இல்லத்தில், குடும்பத்துடன் பொழுது போக்குகிறார். இவருடன் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் செலுவராயசாமி உட்பட எம்.எல்.ஏ.,க்கள், ஸ்டார் பிரசாரகர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர்.ம.ஜ.த., வேட்பாளர் குமாரசாமி, இறுதி நொடியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த பின், தொடர் பிரசாரத்தில் இருந்தார். ஓட்டு பதிவு நாளன்று மாலை, பிடதி பண்ணை வீட்டுக்கு சென்று, தோட்டத்தை சுற்றி வந்து மனதை, உடலைஉற்சாகப்படுத்தினார்.தற்போது பெங்களூரின், ஜெ.பி.நகர் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். நாளிதழ், புத்தகங்கள் படித்து பொழுது போக்குகிறார்.இதுபோல முதல் கட்ட தேர்தல் முடிந்த மற்ற 13 தொகுதிகளின் வேட்பாளர்களும், முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஓய்வு எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை