உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமும் ஒரு கோடி ரூபாய் வசூல்:வசூலில் டாப் சுங்கச்சாவடிகள்; எங்கே இருக்குன்னு பாருங்க!

தினமும் ஒரு கோடி ரூபாய் வசூல்:வசூலில் டாப் சுங்கச்சாவடிகள்; எங்கே இருக்குன்னு பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், 5ல் மட்டும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகியுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் 5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகிறது. * குஜராத் மாநிலம், பரதனா சுங்கச்சாவடியில், 2023-24ம் நிதியாண்டில், ரூ.475.65 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,043 கோடி வசூல் ஆகியுள்ளது. இது தான் நாட்டிலேயே அதிக கட்டணம் வசூல் ஆகும் சுங்கச்சாவடி.* 2ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலம், ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி வசூல் ஆகியுள்ளது.* 3ம் இடத்தில் உள்ள ஹரியானா மாநிலம், கரோண்டா சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.4,026 கோடி வசூல் ஆகியுள்ளது.* 4ம் இடத்தில் உள்ள மேற்குவங்க மாநிலம், ஜல்துலகோரி சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.364.23 கோடி வசூல் ஆகியுள்ளது.* 5ம் இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலம், பரஜோர் சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.364 கோடி வசூல் ஆகியுள்ளது.கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும், சுங்கச்சாவடிகளில் ரூ.1.94 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. அதிக சுங்கச்சாவடிகள் இருக்கும் மாநிலப்பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 142 சுங்கச்சாவடிகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 102 சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், கடந்த 5 ஆண்டுகளில் 457 சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஆக 03, 2024 23:33

அங்கு எல்லாம் ஒரு சில சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்கும் அதனால் தான் வசூல் அதிகம் ஆகிறது. இங்கு தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகளை விட அதிகமாக சுங்கச் சாவடிகள் இருக்கும் போல் உள்ளதே!


M VENKATESAN
ஆக 03, 2024 20:29

Good info, Thanking you


KRISHNAN R
ஆக 03, 2024 16:19

ஒகே ....காலக்கெடு முடிந்த.... பல சுங்க சாவடிகள்.. வசூல் செய்து வருவது.. ஏ ன?...


Jysenn
ஆக 03, 2024 16:10

The Tasmac of the central government.


Ms Mahadevan Mahadevan
ஆக 03, 2024 15:45

சரிதான் அய்யா. அதில் பராமரிப்பு சிலவு எவ்வளவு என்பதையும் யார்யார்க்கு எவ்வளவு போனது மிச்சம் இருதால் கட்டணத்தை குறைக்க முடியும் என்பதையும் சொல்லும் தைரியம் உண்டா? மக்கள் நல அரசு என்றால் விவரம் சொல்லட்டும்


Tiruchanur
ஆக 03, 2024 16:48

RTI போட்டு கேட்கவும். எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு.


பாமரன்
ஆக 03, 2024 14:21

இதை சொல்ல தைரியம் இருக்கும் அரசுக்கு அந்தந்த சாலைகள் கட்டமைக்க ஆன செலவு மற்றும் அந்த பணம் வசூல் ஆகிவிட்டால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுதான்னு சொல்லும் தைரியம் உண்டா...?? அட மக்களுக்காக பத்திரிகை நடத்தும் ? மலர் கேட்குமா?..,??


Chandran,Ooty
ஆக 03, 2024 15:13

ஏலேய் பாமரா கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து புரோட்டாவ திம்போமா போய் வேற ஏதாவது உருப்படியான வேலையிருந்தா அதப் பாரு மொதல்ல! வந்துட்டான் வாண்டடா நானும் ரவுடிதான்னு..


premprakash
ஆக 03, 2024 15:34

ரோடு போட்டு வாகனங்களை பெருக்கி நாட்டை சுடுகாடு ஆகாமல் விடமாட்டான் இந்த பி ஜே பி காரன்... படு பாவி ரயில் விடாமல் ரோடு போட்டு நாட்டை அழிவின் பாதையில் கொண்டு போறான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை