உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று(ஜூன் 13) பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது: புதிய தே.ஜ., கூட்டணி அரசு பாதுகாப்பு உபகரணங்களின், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்

ரூ.50ஆயிரம் கோடி

2028- 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை, தற்போதைய ரூ.21,083 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக உயர்த்த அரசு முனைப்புடன் செயல்படும். அதிநவீன ஆயுதங்கள் தங்களிடம் உள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
ஜூன் 13, 2024 19:11

உள்நாட்டு பாதுகாப்பு தேசிய பாதுகாப்புடன் இணைந்தது. மாநில போலீஸார் மாநில ஆளும் கட்சி சொல் கேட்கும் நிலை. சில மாநிலம் தேசிய பாதுகாப்பு பற்றி கவலை கொள்வது இல்லை. இதனை தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய காவல் நிலையம் முறையே கலெக்டர், கவர்னர் , மத்திய உள் துறை செயலர் கீழ் இயங்க வேண்டும். இந்த முறை கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, காஸ்மீர், குஜராத், மகாராஷ்டிராவில் முதலில் பின்பற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை