உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ விபத்தில் நான்கு பழங்கால கார்கள் நாசம்

தீ விபத்தில் நான்கு பழங்கால கார்கள் நாசம்

ஜவுனாபூர்: தெற்கு டில்லியின் நான்கு கூடார குடோன்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பழங்கால கார்கள் எரிந்து நாசமாகின.ஜவுனாபூர் பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பழங்கால கார்களான விண்டேஜ் கார்களை வாடகைக்கு விடும் கடை உள்ளது. இங்கு பழங்கால கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.நேற்று அதிகாலை 1:56 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, அருகில் உள்ள குடோன்களுக்கும் பரவியது. தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தின.பயங்கர தீ விபத்தில் நான்கு பழங்கால கார்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலங்கார பொருட்கள் எரிந்து நாசமாகின.விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ