உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே எரிபொருள்

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே எரிபொருள்

புதுடில்லி: காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு, மார்ச் 31ம் தேதிக்கு பின், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எந்தவிதமான எரிபொருளும் நிரப்பப்பட மாட்டாது என, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.உலக அளவில் மிகவும் மோசமான காற்று மாசு உள்ள நகரங்களில், டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ifjr2whq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டில்லி முதல்வராக பா.ஜ.,வின் ரேகா குப்தா பொறுப்பேற்ற நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர் கூறியதாவது:டில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு, வரும் 31ம் தேதிக்கு பின் எரிபொருள் நிரப்பப்படாது. இதற்காக, அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் பழமையான வாகனங்களை கண்டறியக்கூடிய சாதனத்தை நிறுவி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, டில்லியில் காற்று மாசின் தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.டில்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்களிலும் காற்று மாசை குறைக்கும் வகையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரங்களை அதிகளவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லியில் தற்போது பொது போக்குவரத்துக்கு சி.என்.ஜி., பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kart
மார் 09, 2025 01:43

Yes only maintenance is important and not age of vehicle for non living thing. Even if its one year if not maintained properly it will cause pollution and accidents


muthu
மார் 03, 2025 23:38

Let the govt brings practical solution to reduce pollution. ie what modification is to be done in the old vechile to reduce pollution or change the fuel to to reduce pollution


Mani Sujith
மார் 03, 2025 20:00

முதலில் அரசு பஸ்சை 15 ஆண்டுகளுக்கு மேல் இயக்க வேண்டாம் குப்பை லாரி மாதிரி இருக்கு சில அரசு வாகனங்கள்


Neelachandran
மார் 03, 2025 13:21

புதியவாகனம் வாங்கமுடியாத ஏழைகள் பாவப்பட்டவர்களா.அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும்.


R sampath
மார் 03, 2025 06:07

பெட்ரோல் பம்ப் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.


J.Isaac
மார் 02, 2025 21:58

கனரக வாகனங்களுக்கு மட்டும் என்றால் நியாயம். அனைத்து வாகனங்களுக்கு என்றால் அயோக்கியத்தனம்


Loganathan Kuttuva
மார் 02, 2025 12:19

It should be based on emission report and not on age of vehicle.


Balasubramanian S
மார் 07, 2025 20:59

Correct. All depends upon the maintenance of the vehicle by periodically servicing the vehicle. Even in some vehicle of 5 years of age , emission level is high. So once the emission exceeds the permissible level, the RC should be withdrawn, not withstanding its age


Barakat Ali
மார் 02, 2025 10:17

15 ஆண்டுகளை 10 ஆண்டுகளாகக் குறைக்கணும் ..... வாகனக் கடனுக்கான வட்டியை அதிகரிக்கணும் ...... பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கணும் ..... அப்பத்தான் கார்பன் உமிழ்வு ஓரளவாவது குறையும் .... உலகமே மூச்சுத் திணறுது .....


Ethiraj
மார் 02, 2025 10:36

Why you want to punish public Road width ,parking space,signal free roads,total exemption of all taxes if you surrender two vehicles can be introduced Free bus travel for all senior citizens and children in govt buses can also be introduced


J.Isaac
மார் 02, 2025 21:56

அப்போ தான் கார் விற்பனை அதிகமாகும். வரி அதிகம் கிடைக்கும். கார்ப்பரேட் வருமானம் அதிகரிக்கும்


Ashvini Sa
மார் 09, 2025 09:19

நீங்க சொல்லறத்து சரிதான் அனாலும் பணம் இல்லாம தானே பழைய வாகனங்களை வங்காரம் அதிலும் நீங்கள் 15 ஆண்டுகளை ஆண்டுகளை குறைதல் என்ன பண்ண முடியும் ev இரு சக்கர பைக்கை 99000 ரூபாய் இதற்குள் அடக்க வேண்டும் இந்தியா கவமென்ட் முடிவு எடக்க வேண்டும் கீழ் தட்டு மக்களுக்கு சுலப தவணை மற்றும் சலுகையை பெற செய்ய வேண்டும் மக்களுடைய பழைய வாகனங்களுக்கு உரிய இல்லப்பிடு கிடைக்க பெறனும் இல்லையேல் பழைய வாகனங்களை மறு சூழற்சி செய்ய வேண்டும் நன்றி இந்திய கவமென்ட்


Ashvini Sa
மார் 09, 2025 09:39

என்னுடைய சொந்த கருத்து என்னுடைய வாகனம் வருடம் 2014 இதை மறு சீரமைப்பு பேட்டரி வாகனமா மாற்றி தர முடித்தல் நன்றாக இருக்கும் அதற்கு என்னால் முடித்த தோகையை 15000 ஆதாகும் கடன் வாங்கணும் வட்டி வீகிதம் 100/16 ரூபாய் வட்டி விகிதம் 15000=✓2400+17400 மொத்த10 வாரங்கள் இதர செலவுகளும் சமாளிக்க வேண்டும் என்னுடைய சம்பளமே வாரம் 3500 ரூபாய் மட்டும் தான் இது என்னுடைய சொந்த கருத்து நன்றி இந்தியா கவர்மென்ட்


Ashvini Sa
மார் 09, 2025 09:46

அடுத்து 100cc இரு சக்கர வாகனங்களை 150cc மேல் உள்ள வாகனங்கள் பெட்ரோல் விலை உயர்த்த வேண்டும் நன்றி


rama adhavan
மார் 02, 2025 09:55

கேனில், வேறு வண்டியில் இருந்து ஏரி பொருள் நிறுப்புவார்கள். உபயோகம் அற்ற உத்திரவு.


veeramani
மார் 02, 2025 09:51

காலத்திற்குஏற்பா அருமையான முடிவு டீ சல் கார்கள், லாரிகள் ஆகியன தில்லி மாநகரத்திற்குள்ளாகா ஓடுவதை முதலில் நிறுத்துங்கள் . அன்றைய நாட்கள் போல ஒவொரு சிக்னல், ரவுண்டானா கலீல் நீர் ஊற்றுகள் வாட்டர் போவுண்டன் ஏற்படுத்துங்கள். பௌவுண்டை உயரம் சுமார் இருபது ஆதி இருக்கலாம் . இதனால் காற்றிலுள்ள சிறிய துக்லக்ள் தண்ணீரில் உறிஞ்சப்பட்டு கீழேவந்துவிடும் . ஐரோப்பா வில் இதைத்தான் செய்கிறார்கள்.


புதிய வீடியோ