உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே கவலை

24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது மட்டும் பிரச்னை இல்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளன. வினாத்தாள் கசிந்துள்ளன. அதிக ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே, 'பணம் கொடு, பேப்பர் எடு' என்ற விளையாட்டு நடந்து வருகிறது.

தண்டனை

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

s chandrasekar
ஜூன் 15, 2024 16:02

He does not know what is NEET . He is chinnathi of Congress.


vejai
ஜூன் 13, 2024 22:40

முதலை கண்ணீர்


Ramesh Sargam
ஜூன் 13, 2024 21:39

கார்கேவை பார்த்தால் மிக பாவமாக உள்ளது. காங்கிரஸ் வெற்றிபெறும். தமக்கு பிரதமர், அல்லது துணை பிரதமர் அல்லது வேறு ஏதாவது பெரிய பதவி கிடைக்கும் என்கிற கனவில் மிதந்தார். பாவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், இன்னும் அந்த காங்கிரஸ் கட்சியையும், சோனியா, ராகுல் போன்றவர்களையும் நம்பி கொண்டிருக்கிறார்.


Kumar
ஜூன் 13, 2024 21:00

நீலிகண்ணீர்


sankaranarayanan
ஜூன் 13, 2024 20:49

நீட் தேர்வைப்பற்றி கேள்விகளை உங்களது அபிமான கட்சி பிரமுகர் சிதம்பரத்தையும் நளினி சிதம்பரத்தயையும் கேளுங்கள் உங்கள் காங்கிரசு ஆண்ட காலத்தகில்தானய்யா இந்த நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது அதை மறந்து விட்டு பேசக்கூடாது


Varadarajan Nagarajan
ஜூன் 13, 2024 20:32

கல்வி மற்றும் மாணவர்களின் பிரச்னையில் அரசியல் கட்சிகள் பூந்து அரசியல் செய்யாமல் இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். அப்படி தேர்வில் சந்தேகம் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் கோரலாம். அதை யாரும் தடுக்கப்போவதில்லை. தேவையில்லாமல் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யவேண்டாம். முன்பு காங்கிரஸ் ஆட்சிசெய்தபோது இருந்ததைவிட தற்பொழுது மாணவர்களின் எதிர்காலம் நன்றாகவே உள்ளது. அரசியல்வியாதிகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்கு வருமானம் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை அரசியலாக்கிப்பார்க்கின்றனர். ஆனால் இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லூரிகள் பற்றி அரசியல்கட்சிகள் ஏன் வாய்திறப்பதில்லை?


M Ramachandran
ஜூன் 13, 2024 20:21

இனி 5 வருடத்திற்கு கபகப என்று தண்ணிக்காக யேங்கும் தவளை போல் கத்த வேண்டியது தான். பொய்மூட்டைகளை இப்போ அவிழ்த்து விட்டு பயனில்லை. 5 வருடம் களித்து தேர்தல் சமயம் ரீல் விடலாம்


Karthikeyan
ஜூன் 13, 2024 20:12

முதல்ல...கார்கே தமிழ்நாட்டு மக்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கன்னட மொழி வெறி பிடித்தவர்...மாணவர்களைப் பற்றி கவலைப்படுவது ...பெரிய நடிப்புடா சாமி...


Nagarajan S
ஜூன் 13, 2024 20:05

DMK வின் Modi எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யும். ஆனால் இந்தியா முழுவதும் வேலை செய்யாது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா மார்க்ஸ் போட்டவர்களுக்கு மறு தேர்விற்கு பரிந்துரைத்திருக்கிறது. நீட் தேர்வால் தான் ஏழை மாணவர்கள் டாக்டராக முடிந்தது. தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாணவர்களிடம் கொள்ளை அடிக்க முடியாமல் இருந்தது. நீட்டை ஒழித்து கட்டிவிட்டால் தனியார் கல்லூரிகள் கொள்ளை அடிக்க ஏதுவாக இருக்கும்.


anand
ஜூன் 13, 2024 19:33

உங்களுடைய Modi எதிர்ப்பு அரசியல் எல்லை தாண்டி இப்போது வின்வெளி தாண்டி போய் கொண்டுஇருக்கிறது. காலையில் எழுத்து பாத்ரூம் போன கூட அதுக்கு காரணம் Modi தான் என சொல்லுவீர்கள் போல. ஒரு நல்ல எதிர் கட்சியாக செயல்பட்டு அடுத்த முறை ஆட்சியை பிடிக்க பாருங்கள். இப்படியே போனால் 2029–லிலும் ஆட்சியை பிடிக்க முடியாது. DMK வின் Modi எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யும். ஆனால் இந்தியா முழுவதும் வேலை செய்யாது. கடைசி வரை புலம்ப வேண்டியிருக்கும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை