உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கீதா சிவராஜ் குமார் வெற்றி உறுதி டிராக்டரை பந்தயம் வைத்த விவசாயி

கீதா சிவராஜ் குமார் வெற்றி உறுதி டிராக்டரை பந்தயம் வைத்த விவசாயி

ஷிவமொகா: கர்நாடகாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் ராகவேந்திரா, காங்கிரசின் கீதா சிவராஜ்குமார் போட்டியிட்டு உள்ளனர். கர்நாடகாவில் அதிக கவனம் ஈர்த்த தொகுதிகளில் இதுவும் ஒன்று.இந்நிலையில், இம்மாவட்டத்தின் ஷிகாரிபுராவின் கல்மனே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவீந்திரா. தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். இவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அதில், 'காங்கிரசின் வாக்குறுதி திட்டங்களால், இம்முறை ஷிவமொகா லோக்சபா தேர்தலில் கீதா சிவராஜ்குமார் வெற்றி பெறுவார். பா.ஜ.,வினருக்கு நேரடியாகவே சவால் விடுகிறேன். கீதா சிவராஜ் குமார் வெற்றி பெறவில்லை என்றால், எனது டிராக்டரை தந்துவிடுகிறேன்' என்று பந்தயம் வைத்துள்ளார்.சமீபத்தில் தான் இவரின் பழைய டிராக்டரை விற்று, புதிய டிராக்டர் வாங்கியுள்ளார். இவரின் இந்த பந்தயம், அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை