உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், பீஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.இதில், 16 எம்.பி.,க்கள் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்.பி.,க்கள் உள்ள பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை மிக முக்கியமான கட்சிகள். இந்த மாநிலங்களின் கூட்டணி அரசில் பா.ஜ.,வும் இடம்பெற்றுள்ளது.மிகவும் பின்தங்கியுள்ள பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என, ஐக்கிய ஜனதா தளம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த, 2014ல் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று, பார்லிமென்டில் நேற்று முன்தினம் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் இந்த மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன.அதன்படி, கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில், சில முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு, சர்வதேச நிதி அமைப்புகள் வாயிலாக கடன்கள் வாங்கித் தருவது விரைவுபடுத்தப்படும் என, கூறப்பட்டுஉள்ளது.இதைத் தவிர, பீஹாரில், 26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம், மருத்துவ கல்லுாரி, விளையாட்டு கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் அடங்கிய, 'பூர்வோதயா' பிராந்தியத்துக்கு, அனைத்து தரப்பு வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தில், புதிதாக தொழில் பெருவழிப் பாதையும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் உள்ளது.ஆந்திராவின் அமராவதியில், மாநில தலைநகர் அமைப்பதற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் பட்ஜெட்களில் கூடுதல் தொகை ஒதுக்கப்படும் என்றும், நீண்ட கால கோரிக்கையான போலாவரம் பாசன திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தேவையான நிதியுதவி செய்யப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jay
ஜூலை 24, 2024 21:43

கருணாநிதி காலத்தில் இருந்து திமுக கோயம்புத்தூருக்கோ திருப்பூருக்கு ஈரோட்டுக்கு மற்றும் கரூருக்கு எந்த திட்டமும் கொண்டு வந்ததில்லை. கருணாநிதி காலத்தில் வந்த அனைத்து கம்பெனிகளையும் சென்னையிலேயே அமைத்தனர். சென்னையில் முதல் மட்ட ரிங் ரோடு இரண்டாம் கட்ட ரிங் ரோடு தற்போது மூன்றாம் கட்ட ரிங் ரோடு என்றெல்லாம் வேலைகள் நடக்கிறது. கோயம்புத்தூருக்கு அப்படியெல்லாம் நடக்கவில்லை. பொதுவாக திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் இருந்து தொகுதிகள் கிடைக்காது. ஆகவே அவர்கள் கொங்கு மண்டலத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்கள். தற்போது மத்திய அரசை கேட்பதைப் போல கொங்கு மக்கள் திமுகவை காலங்காலமாக கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போதைய ஆட்சி வந்தவுடன் சென்னையில் பூங்காக்களை மேம்படுத்த 2000 கோடி ஒதுக்கினார்கள். கொங்கு மண்டலத்தில் நடந்து வந்த அத்திக்கடவு திட்டத்திற்கு ஒதுக்கவில்லை. பல செய்திகள் போராட்டங்கள் வந்த பிறகுதான் நிதி ஒதுக்கினார்கள்.


அப்புசாமி
ஜூலை 24, 2024 10:08

இங்கே அண்ணாமலை, தமிழ் மியூசிக் போன்ற பெரும் தலைவர்கள் தமிழ்நாடுக்கு நிறைய செஞ்சுட்டதா ஜல்லியடிக்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 12:05

தலீவரின் பூர்வீக மாநிலத்துக்கு திட்டம் கொடுத்தாலும் திட்டணுமா?


nv
ஜூலை 24, 2024 09:40

இன்னும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்மால் கேள்வி கேட்க முடியும்? திருட்டு திராவிட கும்பலுக்கு இன்னும் வாக்கு அளித்தால் தமிழ்நாடு முன்னேறவே முடியாது


Bhaskaran
ஜூலை 24, 2024 08:40

செட்டியாரை பர்போலா ஏ தமிழகத்துக்கு நன்மை செய்ய நினைக்காத நிதியமைச்சரைப் பெற தமிழகம் என்ன தவம் செய்த தோ


Indhuindian
ஜூலை 24, 2024 07:34

வாய் உள்ள பிள்ளை பொஷசிக்குது. சும்மா எப்பவும் கோ பேக் மோடி, கருப்பு கோடி, கருப்பு பலூன் காட்டினா இப்படிதான் நடக்கும்


அரசு
ஜூலை 24, 2024 06:37

அவர்களுக்கு தாராளமாக கொடுக்கவில்லை என்றால் காலை வாரி விடுவார்கள். அப்புறம் மத்தியில் இருக்கும் மைனாரிட்டி அரசு கவிழும்.


சண்முகம்
ஜூலை 24, 2024 05:58

விடியலுக்கு பெருமளவு வாக்களித்த தமிழ் நாட்டு மக்களுக்கு விடிவு கிடையாது.


Paul Nayanar
ஜூலை 24, 2024 06:41

தாமரைக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு அல்வா கொடுத்த நிம்மி அக்கா பிஜேபி எப்போதும் சொல்வது போல முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பு தமிழ்நாட்டிலிருந்து பிஜேபிக்கு ஓட்டு போட்டவர்களை பிஹாருக்கும் ஆந்திராவுக்கு அனுப்ப வேண்டும்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை