உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 அடி உயர அங்கன்வாடி கட்டடத்தில் இருந்து விழுந்து சிறுமிக்கு தலைக்காயம்; காப்பாற்ற முயன்ற ஊழியர் காலும் முறிந்தது

20 அடி உயர அங்கன்வாடி கட்டடத்தில் இருந்து விழுந்து சிறுமிக்கு தலைக்காயம்; காப்பாற்ற முயன்ற ஊழியர் காலும் முறிந்தது

மூணாறு : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கல்லாரில் 20 அடி உயரம் உள்ள அங்கன்வாடி கட்டட மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி தலையில் காயம் அடைந்த நிலையில், அவரை காப்பாற்ற குதித்த பெண் ஊழியரின் கால் முறிந்தது. இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் உத்தரவிட்டார்.கல்லார் ஆண்டப்பன் - அனிஷா தம்பதி மகள் மெரினா 4. அங்குள்ள அங்கன்வாடியில் படித்தார். நேற்றுமதியம் 12:30 மணிக்கு அங்கன்வாடி கட்டட முதல் மாடி வராண்டாவில் தேங்கிய மழைநீரில் கால் வழுக்கி கம்பிகளுக்கு இடையே 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற வட்டையாறு பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் பிரீத்தி 52, கீழே குதித்தார். சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பிரீத்திக்கு இடது கால் முறிந்தது. கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுமியும், அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பிரீத்தியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அடிமாலி ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தின் கீழ் தளத்தில் அங்கன்வாடி செயல்பட்டது. 2018ல் பெய்த மழையின் போது அங்கன்வாடிக்குள் தண்ணீர் புகுந்ததால் முதல் மாடிக்கு மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு கீழ் தளத்தில் வைத்து உணவு வழங்கப்படுகிறது. நேற்று உணவு அருந்தி விட்டு சென்றபோது, சிறுமி கீழே விழுந்தார்.

அமைச்சர் உத்தரவு

கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அமைச்சர் வீணாஜார்ஜ், மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அங்கன்வாடி கட்டட பாதுகாப்பை உறுதி செய்யவும், சம்பவம் குறித்து மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ