உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது; உயரதிகாரிகளுக்கும் தொடர்பு

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது; உயரதிகாரிகளுக்கும் தொடர்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்தார். அதில், 'மும்பையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் சச்சின் கோகுல்கா தலைமையிலான குழுவினர், வழக்கு ஒன்றிற்காக என்னை கடந்த 4ம் தேதி அழைத்துச் சென்றனர். அந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்கவும், எனக்கு சாதகமாக செயல்படவும், 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.'பேச்சுக்கு பின், 60 லட்சம் ரூபாயாக குறைத்தனர். நான் உறவினரிடம் பேசி முதல் தவணையாக 30 லட்சம் ரூபாய் தந்த பின் தான் என்னை மறுநாள் விடுவித்தனர். தற்போது மீத லஞ்ச பணத்தை கேட்டு வருகின்றனர்' என கூறியிருந்தார். இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப் படி, 20 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் தயாராக இருப்பதாக மும்பை மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தைச் சேர்ந்த சி.ஏ., ராஜ் அகர்வாலுக்கு தொழிலதிபர் நேற்று தகவல் தந்தார். ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சார்பாக, 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை அவர் பெற்ற போது சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரை வைத்து ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் சச்சின் கோகுல்காவுக்கு லஞ்சம் தரப்பட்டு, அவரையும் சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த லஞ்ச வழக்கில் மும்பை மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கூடுதல் கமிஷனர் தீபக் குமார், இணை கமிஷனர் ராகுல் குமார், சச்சின் உட்பட நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V RAMASWAMY
செப் 09, 2024 17:35

Our tem is such that once someone is ged of a crime, it will take months to gesheet him, arrest him and to start investigations meanwhile, the alleged culprit will file umpteen cases against it, time will roll by and in case some action is taken against that person, years will roll by and everyone will forget about it.


R. THIAGARAJAN
செப் 09, 2024 12:19

The fradulant and corrupted officials must sent to the brave Mr.Kim North Korea. In india corruptions are PART and Parcel the inception of INDEPENDENCE. JAI HIND, VANDE MATHARAM BHARATH MATHA KI JAI etc as usual


அப்பாவி
செப் 09, 2024 10:05

அமைச்சர்களுக்கு கட்டிங் எவ்ளோ போச்சாம்?


Ram
செப் 09, 2024 09:24

புல்டோசர் வைத்தியம் கொடுப்பார்களா


N.Purushothaman
செப் 09, 2024 08:16

இவனுங்க வீட்டை கூட இடிச்சி தள்ளினா நல்லா இருக்கும் ....


Kanns
செப் 09, 2024 08:15

Arrest, Suspend, & Punish All Concerned MegaBribe Looters Without Mercy


Lion Drsekar
செப் 09, 2024 06:17

இது யாருமே இல்லை, யார் வேண்டுமானாலும் என்ன நினைத்தாலும் , ஒவ்வொரு அலுவலகத்திலும் சென்று பார்த்தல் நமக்கே வருத்தமாக இருக்கும், ஒன்றதல்ல இரண்டால் பல லட்சம் ஒவ்வொருநாளும் அமோகமாக நடைபெறுவதை கண்ணால் பார்க்கலாம் . மிகப்பெரிய அதிகாரிகள் தங்கள் செயலாளர்கள் வழியாக பெறுகிறார்கள், கஸ்டம்ஸ் துறையில் கணினியில் ஒவ்வொரு பதிவையும் ஏற்றுபவர் , பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பணியாற்றுகிறார், இவர் வெளியே செல்லும்போது வேறு ஒருவர் வந்து அந்த பணியை மேற்கொள்கிறார், அவர் வெளியே செல்லும்போது எதற்க்காக செல்கிறார், என்பதை வருவோர்கள் தினம் இனம் கொடுக்கும் கையூட்டு எவ்வளவு என்பதை கொடுப்பவர்களும் அறிவார்கள், நேர்மையாளர்களும் ஆக எங்கும் எதையும் அழிக்க முடியாது . நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் அது பிரதிபலிக்கும், ஒரே வருத்தம் நேர்மையுடன் பணியாற்றவேண்டும் என்று வரும் இளைஞர்களையும் தங்கள் பாதைக்கு அழைத்துச் செய்கிறார்கள் .இது ஒரு பானை சோறுதான் குழந்தை பிறக்கும் மருத்துவமனை முதல் இடுகாடுவரை இதே நிலைதான் வந்தே மாதரம்


Parameswar Bommisetty
செப் 09, 2024 10:19

நூற்றில் ஒன்று அல்லது இரண்டு தான் வெளிச்சத்திற்கு வருகின்றன அதுவும் புகார் அளித்ததனால். பல மடங்கு லஞ்சம் வெளியில் தெரிவதில்லையே.


Kasimani Baskaran
செப் 09, 2024 05:28

சொத்துக்களை அரசுடைமையாக்கி 20 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். இல்லை என்றால் பயப்பட மாட்டார்கள்.


gvr
செப் 09, 2024 04:11

Dismiss them and attach their retirement benefits


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை