உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைந்தபட்சம் 2 குழந்தைகளை பெறணும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

குறைந்தபட்சம் 2 குழந்தைகளை பெறணும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : “பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுரை கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிரித்தபடி, “தேவைப்பட்டால் வருங்காலங்களில் இதுகுறித்து வீடுகள் கண்காணிக்கப்படும்,” எனவும் கூறினார்.தென் மாநிலங்களில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கருத்து கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'நீங்கள் நினைப்பது போல உங்கள் பெற்றோர் நினைத்திருந்தால், இப்போது நீங்கள் பிறந்திருக்க முடியுமா; உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தான் இனிமேல் பரிசீலிக்கப்படுவர்' என்றும் கூறியிருந்தார்.மேலும் அவர், 'குழந்தை இல்லா தம்பதியை சமூகத்தில் பலரும் ஒதுக்கி வைப்பர்' என்றும் கூறி, சர்ச்சையை கிளப்பியிருந்தார். முன்னதாக, 'ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது' என்றும் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டசபையில் நேற்று பேசும்போது, “பெண்கள் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக கிராமங்களிலும், தொகுதிகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்,” என்றார்.மேலும் அவர் சிரித்தபடி, “தேவைப்பட்டால் இதுகுறித்து வருங்காலங்களில் வீடுகளை கண்காணிக்கவும் அரசு தயங்காது,” எனவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Natchimuthu Chithiraisamy
மார் 22, 2025 11:44

அசைவமும் அமமனம் கொண்ட மும்தாஜ் ஓட்டல் கட்ட முதல்வர் அனுமதி மறுப்பு எனவே அவர் அவர் குடும்பம் பல்லாண்டு வாழட்டும்


முருகன்
மார் 15, 2025 15:23

இரண்டாவது குழந்தை மீது நீங்கள் கட்டம் பெற தானே மக்கள் வளர்ச்சிக்கு என அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பது பல லட்சம் கோடி


Mr Krish Tamilnadu
மார் 15, 2025 14:50

ஆந்திர அரசை கணினி மயமாக்கிய முன்னோடி அவர்களே. இன்று 5, 10 ஆக சம்பாதித்த காசையும் ஆதார் அப்டேட்க்கு கொடுத்து கொண்டு உள்ளோம். ஜிபே மூலம் வரவை கண்டுபிடிக்க ஆசைப்படும் அரசு, உழைத்த பணம் தொழில்நுட்பத்தில் தொலைத்து போவதை தடுக்க மறுக்கிறது. ஒரே நாடு தானே, என்ன இன்டர்நேஷனல் பரிமாற்ற மா நடக்கிறது?. நம் வரவுகளில் வாழும் வங்கிகள், கைகளை கண்ணுக்கு தெரியாதவர்களை நோக்கி காட்டுகிறது, களவு பரிமாற்றங்களில். இரண்டு குழந்தைகள் என்ற ஞான உதயம் எதற்கு? சொத்து சண்டை வழக்குகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கா?


Ramesh Sargam
மார் 15, 2025 12:46

இரண்டு என்ன, மூன்று அல்லது நான்கு பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அவைகளை பராமரிக்க நாயுடு அரசு பணம் தருமா?


ஆரூர் ரங்
மார் 15, 2025 09:24

இப்போதள்ள மக்கள் தொகைக்கே நிலவளத்தையும் நீர் வளத்தையும் பாழாக்கி பல போக விவசாயம் தேவையாக இருக்கிறது. அபாயகரமான அளவு உரங்கள் பூச்சிமருந்துகளும் தேவைப் படுகின்றன. ஆற்றுநீர் தாவா வழக்குகளுக்கு குறைவில்லை. அவசர முடிவுகள் பெரும் பின்விளைவுகளை உருவாக்கும்.


தமிழ்வேள்
மார் 15, 2025 09:10

மூர்க்க கும்பல் கருத்தடை மருந்து கலந்து பிரியாணி விற்கிறது.. இதில் ஏகபோக உரிமை வேறு.. மூர்க்க பிரியாணிக்கு அலையும் ஹிந்து வுக்கு எப்படி புள்ளை பிறக்கும்? அதை அசைவம் ஹிந்து கடைகளில் தின்றால் ஏற்காதா? முனியாண்டி விலாஸ்கள் காணாமல் போன மர்மம் என்ன?


Appa V
மார் 15, 2025 06:49

குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் விருப்பம் இதில் அரசாங்கம் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம் ..LKG அட்மிஷனுக்கே தரமான பள்ளிகளில் லட்சக்கணக்கில் டொனேஷன் தர வேண்டியிருக்கே கணவன் மனைவி வேலைக்கு சென்றால் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் ?


தமிழ்வேள்
மார் 15, 2025 09:12

திருட்டு திராவிடம் வைத்திருக்கும் சின்ன, சிறிய, சின்னஞ்சிறிய வீடுகளை பேபி சிட்டர்களாக மாற்ற வேண்டியதுதான்..


Kasimani Baskaran
மார் 15, 2025 06:47

குறைந்தபட்சம் மக்கள்தொகை குறையாமலாவது பார்த்துக்கொள்ளவேண்டும்.


Iyer
மார் 15, 2025 06:20

இந்த காலத்தில் நாம் உண்ணும் உணவு மிகவும் நச்சு மிகுந்ததாக மாறிவிட்டது. மேலும் உணவை சமைப்பதால் - இருக்கும் கொஞ்சநஞ்ச சத்தும் மடிந்துவிடுகிறது . ஆகையால் குழந்தை பெறவேண்டும் என்றால் 1 தினமும் ஒரு வேளையாவது - சமைக்காத காய்கறி + பழம் + முளைவிட்ட பயறு உண்ணவேண்டும். 2 புகையில, மது , போதை வஸ்துக்கள் - முற்றிலும் தவிர்க்கணும்.


Appa V
மார் 15, 2025 06:54

தெரு சிகனல்களில் பிச்சை எடுக்கும் பெண்மணிகள் கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக வெய்யில் மழை பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயிருக்காங்க


sundarsvpr
மார் 15, 2025 06:08

சர்சைக்குரிய விவாதம் என்றாலும் சிந்திக்கவேண்டியது. இயற்கையை மீறி எது செய்தாலும் பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியாய் இருக்கும். இந்த பலன் நிரந்தரம் இல்லை. குடும்ப கட்டுப்பாடு இயற்கையை மீறியது. இதனால் உடல் மகிழ்ச்சி இருக்கும் மன மகிழ்ச்சி குறைந்துவிடும். செயற்கை அதாவது அறுவை சிகிச்சை மூலம் செயல்படுவதை தவிர்த்து மன ரீதியான கட்டுப்பாடு இருந்தால் போதும்.


MUTHU
மார் 15, 2025 10:03

கட்டுப்பாடு அல்லது கட்டுப்படுத்துதல் என்னும் செயலே இயற்கையை மீறியது தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை