உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலத்த போலீஸ் பாதுகாப்பு எம்.பி.க்களாக பதவியேற்ற சுயேட்சைகள்

பலத்த போலீஸ் பாதுகாப்பு எம்.பி.க்களாக பதவியேற்ற சுயேட்சைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிறையில் இருந்தே சுயேட்சையாக வெற்றி பெற்ற இரு எம்.பி.க்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் வந்து பதவியேற்றுக்கொண்டனர்.பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் 'பஞ்சாப் வாரியர்ஸ்' என்ற அமைப்பை வைத்துக்கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 2023-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போன்று காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா எம்.பி., தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பயங்கரவாதி ஷேக் அப்துல்லா ரஷீத். இவர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களில் அப்துல் ரஷீத்திற்கு இரு மணி நேரமும், அம்ரித்பால் சிங்கிற்கு 4 நாள்கள் பரோல் கிடைத்த நிலையில் இவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்லிமென்ட் கொண்டு வரப்பட்டு. இன்று எம்.பி.க்களாக பதவியேற்றனர். முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SP
ஜூலை 06, 2024 17:16

ஒருமுதல்வரே சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்கும் காலத்திலாவது பதவியில் நீடிக்கஅனுமதிக்கக்கூடாது.


Muralikumar
ஜூலை 06, 2024 12:02

சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.


Muralikumar
ஜூலை 06, 2024 12:02

சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.


Muralikumar
ஜூலை 06, 2024 12:01

சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.


karunamoorthi Karuna
ஜூலை 06, 2024 08:13

தேர்தலில் ஓட்டு போட சிறை தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு உரிமை இல்லை ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி உள்ளது இது முரண்பாடாக உள்ளது இது காங்கிரஸ் கட்சியின் சாதனை சிறையில் உள்ளவர்கள் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்ய வேண்டும்


HoneyBee
ஜூலை 05, 2024 21:11

இவர்களை போட்டியில் அனுமதித்தே தவறு. குற்ற பிண்ணனி உள்ளவர்களை ஏன் போட்டியிட அனுமதித்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்து.. இவ்வளவும் தேவையா


sankaranarayanan
ஜூலை 05, 2024 20:33

இப்படியே சென்றால் நமது நாட்டில் மட்டும் இனி பாராளுமன்ற நபர்கள் அனைவரும் சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்று அப்போதைக்கப்போது பாராளுமன்றம் நடக்கும்போது அவைக்கு வந்து செல்வார்கள் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத சட்டம் இது போற்றத்தான் வேண்டும்


KRISHNAN R
ஜூலை 05, 2024 20:24

இதை விட மோசம் வேறு எதுவும் இல்லை


Raa
ஜூலை 05, 2024 20:16

இந்த கேவலம் ஜனநாயக இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். கேவலம்.


ayen
ஜூலை 05, 2024 20:07

அவசியம் அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை