உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்: பால்கனி இடிந்து விழுந்து ஒருவர் பலி

மும்பையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்: பால்கனி இடிந்து விழுந்து ஒருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் கனமழை பெய்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.மஹாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் அசாமில் சில பகுதிகளில் இன்று(ஜூலை 20) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக தானே மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடைவிடாத மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளது.

அசாம் மாநில மழை நிலவரம்:

கடந்த சில தினங்களாக, அசாம் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கம்ரூப், மோரிகான், திப்ருகார், கோலாகாட், கோல்பாரா, சிவசாகர், கச்சார், துப்ரி, கரீம்கஞ்ச், நல்பாரி, நாகோன், தேமாஜி மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 695 கிராமங்களில் வசித்து வந்த 2,72,037 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

selvam
ஜூலை 20, 2024 14:41

கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை மீட்க நடவடிக்கை தேவைப்படுகிறது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி