உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நட்டாவிடம் விசாரணை ஹைகோர்ட் அதிரடி

நட்டாவிடம் விசாரணை ஹைகோர்ட் அதிரடி

பெங்களூரு : லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., இன்ஸ்ட்ராகிராம் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுலின் அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் அரசு அமைந்தால், முஸ்லிம் அல்லாதோரின் சொத்துகளை பறித்து, முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பகிர்ந்தளிக்கும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது' என, கூறப்பட்டிருந்தது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, கலபுரகி, ஜூவர்கியின், பிரவீன்குமார் பாட்டீல் என்பவர், கலபுரகியின் 'சைபர் கிரைம்' போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதன் அடிப்படையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமித் மாளவியா மீது மக்கள் பிரதிநிதிகள் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், வழக்கு பதிவானது.இந்த வழக்கை ரத்து செய்யும்படி கோரி, இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு தொடர்பாக, விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், 'வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தலாம். ஆனால் மனுதாரர்களை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட கூடாது' என, விசாரணை அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டது.'சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமித் மாளவியாவை வலியுறுத்த கூடாது' என, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 22, 2024 10:15

உண்மையாய்ய்ய சொன்னால் கர்நாடக காங்கரஸ் சுருக்கு சுறு சுறு என்று ஏறிடிச்சி. ஆனால் இஙகு தமிழக காங்கிரஸிற்கு ஏதேன் மேலோ வெண்ணீர் ஊற்றி அடித்தாலும் ஒன்றும் நடக்காது


மேலும் செய்திகள்