உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் மேக வெடிப்பு: 13 பேர் பலி மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரம்

ஹிமாச்சலில் மேக வெடிப்பு: 13 பேர் பலி மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மண்டி: ஹிமாச்சல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்நிலையில் நேற்றும் ஹிமாச்சல் முழுவதும் 5 முதல் 7 செ.மீ., வரை மழை பெய்தது. மண்டி மாவட்டத்தின் ஜோஹிந்தர் நகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தது. மேகவெடிப்பால் ஸ்ரீகந்த் பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சமேஜ் மற்றும் பாகி கிராமங்களைச் சேர்ந்த 45 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர். இந்நிலையில் இந்திய வானிலை மையமானது, ஹிமாச்சலின் பிலாஸ்பூர், ஹமிர்பூர், காங்க்ரா, சம்பா மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

'டோராத்தி சீட்' சேதம்

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மலைப்பிரதேசத்தில், 7,500 அடி உயரத்தில் 'டோராத்தி சீட்' எனும் சுற்றுலா இடம் உள்ளது. இது டிபன் டாப் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து மொத்த நைனிடாலையும் ரசிக்க முடியும். மேகமூட்டம் இல்லாத தெளிவான நாட்களில் இமயமலையையும் பார்க்கலாம். பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட இந்த இடம், நேற்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை