மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago
இடாநகர், அருணாச்சல பிரதேசம், அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமேங், குரூங் கூமே, நம்சாய், லோஹித், கிழக்கு சியாங் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிவாரண முகாம்
இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பாய்ந்தோடும் காமேங், சியாங் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இது தவிர, பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், அங்கு சிக்கித் தவித்த மக்களை தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.இதுதவிர, மாநில தலைநகர் இடாநகர் உட்பட பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல கட்டடங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர். ஆனால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.இதேபோல் பசிகாட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, இதர நகரங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்கள்
அருணாச்சல பிரதேசத்தின் நம்சாய், சங்லாங்க், லோஹித், கிழக்கு சியாங்க் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து நாட்களுக்கு இடாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் அண்டை மாநிலமான அசாமிலும், கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தர பிரதேச மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில், மொரதாபாத் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.அங்கு வசிக்கும் மக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக படகுகளின் வாயிலாக வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், மழை பெய்தால் இதே நிலை நீடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago