உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாகனங்கள் புகையால் காற்று மாசு அதிகரிப்பு

வாகனங்கள் புகையால் காற்று மாசு அதிகரிப்பு

பெங்களூரு:வாகனங்களின் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழை போலீசார் சோதனை செய்யாததால், பெங்களூரில் காற்று மாசு அதிகரிக்கிறது.பெங்களூரில் மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தினமும் 2,000 புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வருகின்றன. இதன் விளைவாக காற்று மாசு விபரீத அளவில் அதிகரிக்கிறது.மக்கள் மூச்சு விட முடியாமல் வாகனங்களின் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழை, போலீசார் சோதனை செய்யாததே அவதிப்படும் சூழ்நிலைக்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.பஸ்கள், கேப், ஆட்டோ, லாரி, பைக் என,அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும். வாகனங்களை சோதனையிடும்போது, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு, அதே இடத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இப்போது அந்த நடைமுறை இல்லை. விதிகளை மீறிய வாகனங்கள், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும். எனவே போலீசாரோ, ஆர்.டி.ஓ., அதிகாரிகளோ வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வைத்துள்ளனவா என்பதை ஆய்வு செய்வதில் ஆர்வம் காண்பிப்பது இல்லை.இதன் விளைவாக, வாகனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு சோதனை செய்யாமலேயே இயங்குகின்றன. கறுப்பு நிறப் புகையை உமிழ்ந்தபடி வாகனங்கள் செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் காற்று அசுத்தமடைகிறது. இது, சுவாசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை