உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள் இண்டியா கூட்டணியினர்: நட்டா விமர்சனம்

ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள் இண்டியா கூட்டணியினர்: நட்டா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'ஊழல்வாதிகளை அகற்றுங்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என இண்டியா கூட்டணியினர் கூறுகிறார்கள்' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சித்ரகூட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 10 வருடங்களுக்கு முன், மக்களை திருப்திப்படுத்தும் அரசியல் நடந்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் வளர்ச்சி அரசியலை முன்னெடுத்து உள்ளார். இது தான் மோடியின் கலாசாரம். சொல்லாததையும் பிரதமர் மோடி செய்திருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள்

தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. ஊழல்வாதிகளை அகற்றுங்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என இண்டியா கூட்டணியினர் கூறுகிறார்கள். இண்டியா கூட்டணி ஊழல்வாதிகளின் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Syed ghouse basha
மே 09, 2024 18:37

உண்மையான ஊழல் சக்கரவர்த்திகள் இருக்கும் இடமும் அடைக்கல ஸ்தலமும் பஜக தான் அது ஒழிக்கப்பட வேண்டியது தான்


Vathsan
மே 09, 2024 17:31

ஒருவேளை ஆட்சி மாற்றம் நடந்தால், பாஜக ஆட்கள் பெருவாரியாக ஊழல் புகாரில் உள்ளே செல்வார்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லிட்டர் பெட்ரோல் Rs கச்சா என்னை டாலர் ஆகா இருக்கும்போது கதறியவர்கள், இப்போ - டாலரில் விற்கும்போது ரூபாய்க்கு கொடுக்கிறீர்கள், அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் ரூபாய்க்கு அல்லவா விற்க வேண்டும்


Ramasamy
மே 09, 2024 16:48

INDIA alliance will protect and engouraging to loute more money


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ