உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 இடங்களில் காயம்... உயிரிழந்த கோல்கட்டா பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

14 இடங்களில் காயம்... உயிரிழந்த கோல்கட்டா பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

டாக்டர் கொலை

கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை பாலியல் பாலத்காரம் செய்து, கால் எலும்பை முறித்து, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

போராட்டம்

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேதப்பரிசோதனை அறிக்கை

இந்த நிலையில், இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில், தலை, கழுத்து, முகம், கைகள் மற்றும் பிறப்புறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் டாக்டரின் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலின் பல இடங்களில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை

இதனிடையே, இளம்பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்புசாமி
ஆக 19, 2024 21:38

குற்றவாளிகளைப்.பிடித்து விசாரித்து சுட்டுத்தள்ளாம் இது மாதிரி புண்ணாக்கு தகவல்களை வெளியிட்டு மகிழ்வோம்.


Azar Mufeen
ஆக 19, 2024 19:28

குற்றவாளிகள் உடல் முழுவதும் சர்க்கரைபாகு ஊற்றி கட்டெரும்பவிட்டு கடிக்க வைத்து சித்ரவதை செய்து கொல்லவேண்டும்


Ram
ஆக 19, 2024 17:18

அந்த காமுகனை சின்ன சின்ன துண்டாய் நறுக்கணும் நெருக்கணும்


Perumal Murugesan
ஆக 19, 2024 17:04

அவனை நடுத்தெருவில் அம்மணமா நிக்க வச்சி தூக்கில் போடுங்க , பார்ப்பவனுக்கு பயம் யாரும் . அது படிப்பினையாக இருக்கும் , இதில் மாற்று கருத்து இருக்கவே கூடாது. அந்த பெண்ணோட மனசு எந்த நிலையில் இருந்திருக்கும். இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும்.இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும். இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும்.


angbu ganesh
ஆக 21, 2024 12:31

அப்படியெல்லாம் சீக்கிரம் சாக கூடாது ஒவ்வொரு நாலும் ஒரு பார்ட் எடுத்துட்டு மிளகா பொடி தடவி சாகடிக்கனும்


Sivagiri
ஆக 19, 2024 16:25

இது போன்ற பொது ஆஸ்பத்திரிகள் , அலுவலகங்கள் , கல்லூரிகள் , பள்ளிகள் , மால்கள் , ஹோட்டல்களில் உள்ள மீட்டிங் ஹால்கள் , என எந்த இடங்களிலும் , எந்த அறைகளிலும் , ,உள்ளே இருப்பது தெரியாத அளவிற்கு கருப்பு கண்ணாடி போடுவதை தடை செய்ய வேண்டும் , உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியும் , வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது , இந்த கண்ணாடி அடிப்பதை தடை செய்ய வேண்டும்


Sivagiri
ஆக 19, 2024 16:18

கும்பலே சேர்ந்து வெறி ஆட்டம் அடியிருக்கும் போல இருக்கு ,


lana
ஆக 19, 2024 15:01

இவ்வளவு வன்முறை தனி ஒருவனா செய்ய முடியாது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வராது இருக்க வாய் எவனும் மூடி இருப்பான். எனவே பிடிபட்ட அம்பு உடன் வில்லை சேர்த்து பிடித்து உடைக்க வேண்டும். இறைவன் இந்த தேசத்தை காக்க வேண்டும்


Ramesh Sargam
ஆக 19, 2024 14:10

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் வக்கீல்களை முதலில் உதைக்கவேண்டும். எந்த வக்கீலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட வரக்கூடாது.


Ramesh Sargam
ஆக 19, 2024 14:08

இந்த கொடூர மரணம், சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியை மட்டுமல்லாமல், உலகையே உலுக்கிய, உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அந்த நிரபயா மரணம் போல நடந்திருக்கிறது. நீதிமன்றம், நிர்பயா மரண வழக்கை நடத்தியதுபோல பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளாமல், எவ்வளவு சீக்கிரம் வழக்கை முடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடித்து, மருத்துவரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே நாளில் கழுவில் ஏற்றவேண்டும். காலதாமதம் குற்றவாளிகள் தப்பிக்க வழி வகுக்கும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2024 14:08

இந்த மூர்கத்தனத்தில் ஈடுபட்டவர்களை இன்னமும் மம்தா எதற்காக காப்பாற்ற முனைகிறார் ?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ