உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.பி.எல்., போட்டி போக்குவரத்து மாற்றம்

ஐ.பி.எல்., போட்டி போக்குவரத்து மாற்றம்

பெங்களூரு: சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், இன்று ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடப்பதால், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீஸ்துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரின் சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் 'ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு' மற்றும் 'டில்லி கேபிடல்ஸ்' இடையே, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நாளை (இன்று) நடக்கிறது. எனவே, குயின்ஸ் சாலை, எம்.ஜி.சாலை, கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை, சென்ட்ரல் தெரு, செயின்ட் மார்க் சாலை, மியூசியம் சாலை, கஸ்துாரி பா சாலை, அம்பேத்கர் சாலை, டிரினிட்டி சதுக்கம், லாவெல்லி சாலை, விட்டல் மல்லையா சாலை, கிங்ஸ் சாலை, நிருப துங்கா சாலையில், நாளை (இன்று) மதியம் 3:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி