உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் ராணுவத்தினர் கட்டிய இரும்பு பாலம்

வயநாட்டில் ராணுவத்தினர் கட்டிய இரும்பு பாலம்

வயநாடு: கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிகவும் வலுவான இரும்பு பாலம் கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்தது. இது ஒரு பக்கம் இருக்க, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. இதையடுத்து வயநாட்டில், 17 மணி நேரம், 50 நிமிடங்களில் 110 அடி நீள இரும்பு பாலத்தை அமைத்தது இந்திய ராணுவம்; இதில் 24 டன் எடை வரையிலான வாகனங்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sivak
ஆக 01, 2024 23:00

அசத்தலான இந்திய ராணுவம் ...


selva
ஆக 02, 2024 09:30

Great!


Shunmugham Selavali
ஆக 01, 2024 22:34

பாலங்கள், அணைகள், கட்டிடங்கள் மற்றும் அணைத்து கட்டுமாணங்களும் ராணுவம் போன்ற திறமையான நேர்மையான தறமான ஊழலற்ற உத்திரவாதமான ஒரு அரசாங்க நிறுவனத்தின் மேற்பார்வையில் கட்டினால் நாடு முன்னேறும். ஊழல் ஒழியும். மாநில அரசின் தலையீடு கூடாது. நமது வரிப்பணம் லஞ்சம் கமிஷனால் வீணாகாது. மீண்டும் மீண்டும் பட்ஜட் போட்டு பழுதானவைகளை புதுப்பிக்க/புதிதாக கட்ட தேவையில்லை. தனிமணிதன் தனக்காக கட்டும் வீடு 50 முதல் 100 வருடம் நிலைக்கிறது ஆனால் அரசாங்கம் காண்ட்ராக்ட்விட்டு கட்டும் கட்டிடம் 20 வருடத்தில் வீணாகிறது. சில குடியிருப்புகளில் மக்கள் விரலாலேயே சிமெண்ட் பூச்சை சொரண்டி எடுக்கிறார்கள். ஊழல் ஒழிந்தால் இந்தியா உலகில் முதன்மையான வல்லரசாகும் காலம் மிகவிரைவில் நடக்கும். இன்று விதிக்கப்படும் வரியை பாதியாக குறைக்கலாம் அல்லது இதே வரி தொடருமானால் வளர்ச்சியடைந்த வல்லரசு பாரதம் நம் கண்முண்ணாலேயே காணமுடியும். மாற்றத்தை உருவாக்குவோம். ஜெய் ஹிந்த்.


Srinivasan Kalyan
ஆக 01, 2024 22:16

இனிமேலாவது, இந்த இ.ன்.டி கூட்டணி அக்னிவீர் நெருப்பு வீரன் திட்டத்திற்கு ஆதரவு தந்து குழப்பம் ஏற்படுத்தாது இருக்க வேண்டும். இல்லெங்கில் வரும் காலத்தில் காப்பாற்றி தர ஆரும் இருக்காது


RAMASAMY
ஆக 01, 2024 21:15

வட மாநிலங்கள் தென் மாநிலங்களை ஆபத்து என்றால் உதவும்.


subramanian
ஆக 01, 2024 21:14

சென்ற வருடம் தமிழ் நாட்டில் வெள்ளம் வ‌ந்தபோது , இப்போது நிலச்சரிவு ஏற்பட்டது எப்போதும் ராணுவம் எல்லா வகையிலும் உதவி செய்கிறது. இனிமேலாவது தென்இந்திய மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.


subramanian
ஆக 01, 2024 21:10

ராணுவத்திற்கு தலை வணங்குகிறேன்.ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்.


Svs Yaadum oore
ஆக 01, 2024 21:09

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு ....17 மணி நேரத்தில் 110 அடி நீள , 24 டன் எடை சுமக்க கூடிய இரும்பு பாலத்தை அமைத்தது ...நீர் வழி , வான் வழி , தரை வழி படை என்றாலே இந்தியாவில் வடக்குதான் ....... இப்போது மட்டும் சமூக நீதி மத சார்பின்மையாக வடக்கு என்றால் இனிக்குதா ?? ...மீதி நேரம் வடக்கு என்றால் படிக்காதவன் , பானிபூரி என்று கொஞ்சம் கூட மனிதம் இல்லாமல் பேசுவானுங்க .....


Rpalnivelu
ஆக 01, 2024 23:02

இப் பாலங்களை வடிவமைத்தது பாரதத்தின் மிகப் பழமையான ராணுவ ரெஜிமென்ட்டான "மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்" MEG. திப்பு சுல்த்தானின் கொடுங்கோல் ஆட்சியை தகர்க்க ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுத்திய முதல் ராணுவ ரெஜிமென்ட்


Velan
ஆக 01, 2024 20:55

சூப்பர் அருமை பாரட்டனும்


RAJ
ஆக 01, 2024 20:46

Hatsoff Military. Jaihind...


Ramesh Sargam
ஆக 01, 2024 20:43

நமது ராணுவ வீரர்களின் இந்த அசத்தலான செயலை கண்டு வியக்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பேசாமல், நம் நாட்டை ராணுவ வீரர்கள் ஆட்சிபுரிந்தால் என்ன, என்று எண்ணத்தோன்றுகிறது. ஊழல் ஒழியும், நாடு வளம்பெறும்.


subramanian
ஆக 01, 2024 21:07

ரமேஷ் சர்கம்,பாகிஸ்தான் எழுபது வருடங்கள் ராணுவ ஆட்சி,என்ன நடந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ