உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர் சர்ச்சையில் சிக்கும் நடிகர் தர்ஷன் துரியோதனன் கதாபாத்திரம் காரணமா?

தொடர் சர்ச்சையில் சிக்கும் நடிகர் தர்ஷன் துரியோதனன் கதாபாத்திரம் காரணமா?

பெங்களூரு,: 'நடிகர் தர்ஷன், புராண கதை கொண்ட திரைப்படத்தில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்ததே, அவர் அனுபவிக்கும் பிரச்னைகளுக்கு காரணம்' என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.கன்னட திரையுலகில் புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் தர்ஷன், 47. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் புடை சூழ, ஆடம்பரமாக வாழ்ந்த இவர், தற்போது ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் நாட்களை கடத்துகிறார். இத்தகைய பிரச்னைகளுக்கு அவர் புராண கதை கொண்ட திரைப்படத்தில், குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்ததே காரணம் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.புராண கதை கொண்ட, குருஷேத்ரா திரைப்படத்தில், துரியோதனன் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டானது. அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் அவர், 100 கிலோ எடை உள்ள உடைகள், அணிகலன்களை அணிந்து நடித்ததாக கூறப்பட்டது. மாண்டியாவின் உப்பாரஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் புராண நாடகங்களில், துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்த கலைஞர்கள் பலர், தங்கள் நிஜ வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சங்கடங்களை அனுபவித்தனராம். புராணத்தில் வரும் துரியோதனன் அகங்காரம் பிடித்தவர்.அனைத்தும் நானே, எனக்கு முன்னால் யாரும் நிற்க முடியாது என்ற அகங்கார குணம், தலைக்கனம் உள்ளவர். பாண்டவர்களை பாடாய் படுத்தியவர். இவரது கதாபாத்திரத்தில் நடித்தவருக்கும், இதே குணம், மனோபாவம் ஏற்படும்.இத்தகைய மனநிலையால் அவர்கள், தாங்களாகவே பல பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டனர். அதன்பின் ஏதாவது ஒரு கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தால், அவர்களின் குணம் மாறும். வாழ்க்கை சுமுகமானதாம்.அதேபோன்று, 'குருஷேத்ரா' படத்தில் துரியோதனனாக நடித்த தர்ஷனுக்கும், அகங்கார குணம் ஏற்பட்டு அடுத்தடுத்த விவகாரங்களில் சிக்கினார். ரேணுகாசாமியை கொலை செய்யும் அளவுக்கு சென்றார். தற்போது கைதாகி சிறையில் இருக்கிறார். வீட்டு உணவு பெறவும் அனுமதி கிடைக்கவில்லை. பெங்களூரு சிறையிலும் கூட ஜாலி வாழ்க்கை வாழ்ந்து சர்ச்சையில் சிக்கி, தற்போது பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, 'துரியோதனனாக நடித்தால், பிரச்னைகள் உறுதி' என, நாடக கலைஞர்கள் பலரும் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை