உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய் ஹிந்த் இருக்க குட்மார்னிங் எதற்கு; கேட்கிறது ஹரியானா அரசு!

ஜெய் ஹிந்த் இருக்க குட்மார்னிங் எதற்கு; கேட்கிறது ஹரியானா அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா மாநில பள்ளிகளில் மாணவர்கள் 'குட்மார்னிங்'கிற்கு பதில் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், '' தேச பற்று, நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், பள்ளிகளில் காலையில் 'குட்மார்னிங்'கிற்கு பதில் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போதும், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை தூண்டும்.

'ஜெய் ஹிந்த்'

தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதில், மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல துவங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

K Subramanian
ஆக 09, 2024 19:31

Jai Hind Jai Hind Jai Hind


Azar Mufeen
ஆக 09, 2024 16:53

வணக்கம் அய்யா, நன்றி அய்யா என்று அழகிய தமிழ் மொழி இருக்கிறதே


Oru Indiyan
ஆக 09, 2024 15:51

மிகசிறந்த அறிவுரை. இதே போல் ஹலோ என்றால் என்ன அர்த்தம் என்று ஒருவருக்கும் புரியாது. தெரியாது... ஹலோ என்று சொல்வதற்கு பதில் வணக்கம், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், நமஸ்தே என்று சொல்லலாம்.


Barakat Ali
ஆக 09, 2024 15:00

அஸ்ஸலாமு அலைக்கும் இருக்க ..........


swamy
ஆக 09, 2024 14:52

சரியான பாதை.....


cbonf
ஆக 09, 2024 14:16

ஆங்கில மோகமும் அடிமை புத்தியும் நம் இந்தியர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை


S. Narayanan
ஆக 09, 2024 13:30

ஜெய்ஹிந்த் இந்திய உணர்வு பொங்க. குட் மோர்னிங் ஆங்கில உணர்வு பொங்க


Narayanan Muthu
ஆக 09, 2024 13:20

நாட்டு வைத்தியம் இருக்க ஆங்கில மருத்துவம் எதற்கு. மக்களை முட்டாளாக்காம விட மாட்டானுங்க இந்த தற்குறிகள்.


Kumar Kumzi
ஆக 09, 2024 14:04

டாஸ்மாக் கொத்தடிமை வேற எப்படி இருப்பார்


Mettai* Tamil
ஆக 09, 2024 14:15

ஜெய் ஹிந்த் என்று சொல்வதில் என்ன பிரச்சனை? ரொம்பத்தான் விசுவாசமா இருக்கீங்க ...60 வருஷ காங்கிரஸ் திராவிட கட்சி ஆட்சியின் விளைவு தான் இந்த மனப்பான்மை.. .....


Swamimalai Siva
ஆக 09, 2024 13:19

ஜெய் ஹிந்த்


KEs
ஆக 09, 2024 13:18

????


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ