உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப்.18, செப்.25, மற்றும் அக். 01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த16-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப். 18-ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதில் வரும் 27 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. 28-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி தேதி 30 எனவும் அறிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதியன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 20, 2024 21:42

தேர்தல் அமைதியான முறையில் நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பவே திட்டம் தீட்டவேண்டும். உள்நாட்டு துரோகிகள், எதிரி நாட்டு பாகிஸ்தான், சீனா இடையூறுகள் என்று பல இடையூறுகளை சந்திக்கவேண்டியிருக்கும். எல்லாவற்றையும் சிறப்பாக எதிர்கொள்ள காவல்துறை, ராணுவம் முழு கவனத்துடன் செயல்படவேண்டும்.

Ramesh Sargam
ஆக 20, 2024 20:33

தேர்தல் அமைதியான முறையில் நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பவே திட்டம் தீட்டவேண்டும். உள்நாட்டு துரோகிகள், எதிரி நாட்டு பாகிஸ்தான், சீனா இடையூறுகள் என்று பல இடையூறுகளை சந்திக்கவேண்டியிருக்கும். எல்லாவற்றையும் சிறப்பாக எதிர்கொள்ள காவல்துறை, ராணுவம் முழு கவனத்துடன் செயல்படவேண்டும்.

மேலும் செய்திகள்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை