உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிண்டால் தொழிற்சாலை குட்டையில் மூழ்கி 3 பேர் பலி 

ஜிண்டால் தொழிற்சாலை குட்டையில் மூழ்கி 3 பேர் பலி 

பல்லாரி : பல்லாரி மாவட்டம், சண்டூர் தோரணகல்லுவில் ஜிண்டால் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இன்ஜினியர்களாக சென்னையை சேர்ந்த மகாதேவன், 23, பெங்களூரின் சுஷாந்த், 23, பல்லாரி புவனஹள்ளியின் ஜடேப்பா, 23, ஆகியோர் வேலை செய்தனர்.தண்ணீர் தேவைக்காக தொழிற்சாலைக்குள், குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டைக்குள் இருக்கும் குழாயில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று காலை மகாதேவன், சுஷாந்த், ஜடேப்பா ஆகியோர், குழாயில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மகாதேவன், குட்டைக்குள் விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக சுஷாந்த், ஜடேப்பாவும் குட்டைக்குள் குதித்தனர். எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.சம்பவம் பற்றி அறிந்ததும் தோரணகல்லு போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று, மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ