உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; சொல்கிறார் ராகுல்

நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ,'' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கம், உ.பி., பீஹாரைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவிலும் பெண்களுக்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் நடந்துள்ளன. ஒரு சமூகமாக நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்கத் தூண்டுகிறது? பத்லாபூரில் அப்பாவி குழந்தைகள் இருவர் மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பிறகு, நீதி கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் வரை அவர்களுக்கு நீதி கிடைக்க முதல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எப்.ஐ.ஆர்

இப்போது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போராட்டம் நடத்த வேண்டுமா? இத்தனைக்கும், பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்குக் கூட சிரமப்படுவது ஏன்? நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களும் தான். எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது, குற்றவாளிகளை தைரியப்படுத்துகிறது.

பாதுகாப்பான சூழல்

சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து அரசுகளும், குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இதனால் ஒவ்வொரு முறையும் போலீசாரை சார்ந்து இருக்க முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Mohan
ஆக 26, 2024 19:34

சபாஷ் இளவரசரே. நீதியைப்பற்றி பேசறீங்க அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி பேசுறீங்க.நீட்டைப்பற்றி பேசுறீங்க இட ஒதுக்கீடு பற்றி பேசுறீங்க. 1970 க்குப் பிறகு பிறந்ததால் உங்களுக்கு விவரம் புரிகிற வயசு வதந்ந போது உங்களுக்கு காங்கிரஸின் பழைய ஏமாற்று வரலாறு சொந்தமாக தெரியவில்லை, வேறு யாரும் சொல்லவும் இல்லை. மிகவும் பிரபலமான காங்கிரஸ் பொய் பிரசாரகர்கள் உங்களுக்கு மூளை சலவையில் புகட்டிய பொய் சரித்திரங்களையும் பூனைசுருட்டுகளையும், நீங்கள் வேண்டுமானால் முழுதாக நம்பி , " நீதியை காப்பாற்றுகிறேன், அரசியல் அமைப்பை காபாற்றுகிறேன், இந்தியாவை காப்பாற்றுகிறேன் எனச் சொல்லி உங்களது இயலாமைக் கனவுகளை உண்மையாக்க முயல்வது சிறுபிள்ளைத்தனம். காங்கிரஸின் முன் வினைகள் இப்போது சுடுகின்றன. மக்களுக்கு நற்சேவை செய்வது அவ்வளவு சுலபமல்ல.


ராமகிருஷ்ணன்
ஆக 23, 2024 05:36

நீ பேசும் எல்லா பிரச்சினைகளையும் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி இருந்தது என்று ஆதாரங்களுடன் பேசினால், நம்பலாம். இல்லாவிட்டால் திட்டுவார்கள். வாங்கி கொள்.


R.RAMACHANDRAN
ஆக 22, 2024 14:14

நீதி கோருவது என்பது அடிப்படை உரிமையாக சொல்லப்பட்டாலும் அது செயல்பாட்டில் இல்லை.காரணம் நீதி வழங்குவது அல்லது வழங்காமல் மோசடி செய்வது என்பது எங்கள் விருப்புரிமை என நீதிபதிகள் சொல்லுகின்றனர்.குற்றவாளிகளின் மீது வழக்கு தொடராமல் நேர்மையானவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை குற்றவாளிகளுடன் ஒத்துப்போக துன்புறுத்துவது என்பது எண்கள் விருப்புரிமை என காவல் துறை சொல்கிறது.இதற்காகவா இந்த நாடு சுதந்திரம் அடைந்தது.


Sridhar
ஆக 22, 2024 14:00

மேற்கு வங்கத்தில் நடந்த கோர சம்பவத்தைப்பற்றி ஒரு வார்த்தை பேச பயப்படும் துப்புக்கெட்ட அரசியல்வாதி, இந்திய குடியுரிமையே இல்லாத ஒரு ஆளு, குடிமகனின் உரிமைகள் பற்றி பேசறது வருந்தத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதுகூட.


Swaminathan L
ஆக 22, 2024 12:36

ஒவ்வொரு முறையும் போலீசாரைச் சார்ந்து இருக்க முடியாது என்றால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறாரா? நீதி நம் உரிமை என்று வன்முறையில் ஈடுபடச் சொல்கிறாரா? மேற்கு வங்கம், உ.பி. பீஹார், மஹாராஷ்டிரா என்று அடுக்கியவர் தமிழ்நாட்டை ஏன் குறிப்பிடவில்லை?


kumarkv
ஆக 23, 2024 16:10

இவன் ஒரு லுசு


murugan
ஆக 22, 2024 12:36

இந்த மனிதருக்கு தன் புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது. வாய்க்கு வந்ததை ஒரு பைத்தியம் போல் பேசிக்கொண்டு திரிகிறார். எல்லோருக்கும் எங்கிருந்து நீதி கொடுத்தார். முதலில் இவரது பாட்டி மரணத்துக்கு பின் நடந்த கலவரத்துக்கு நீதி கொடுக்கவேண்டும்.


S.kausalya
ஆக 22, 2024 12:18

நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. சரி. நிதி, உங்கள் கட்சியின் நிதி யாருடைய உரிமை?. கட்சிக்கு தொடர்பு இல்லாத உங்களின் குடும்பத்திற்கு மட்டுமே உரிமையா? இந்த நாட்டில் கட்சி தொண்டர்களுக்கு எந்த கட்சி என்றாலும் பல்லக்கு தூக்கும் ஒரு பணி மட்டும் தான். கோவிலில் உள்ள நிதி என்றால் கேள்வி கேட்பார்கள்.ஆனால் இவர்களால் வளர்க்கப்பட்டு,இவர்களின் பணத்தினால் சுகம் அனுபவிக்கும் தலைவர்களை ஒரு.வார்த்தை கேட்க மாட்டார்கள்.


karupanasamy
ஆக 22, 2024 11:47

முதலில் உன் பாட்டி கொலை செய்யப்பட்டபோது கலவரம் செய்து சீக்கியர்களை கொன்ற குற்றத்திலிருந்து நீதி வழங்க ஆரம்பிக்கலாமா?


ஆரூர் ரங்
ஆக 22, 2024 11:36

2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கிரிமினல் .இவர்தான் நீதி பற்றிப் பேச மிகவும் தகுதியானவர்.


Jayaraman Easwaran
ஆக 22, 2024 11:32

ஆமாம். நேஷனல் ஹெரால்ட் கேஸ் பற்றி நீதி வேண்டும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ