உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட ஆடி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை

கன்னட ஆடி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை

மைசூரு, : கன்னட ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளான ஜூலை 12, 19, 26, ஆக., 2 மற்றும் சாமுண்டீஸ்வரி ஜனன தினமான ஜூலை 27ல் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல, மைசூரு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.'ஆஷாடா' என அழைக்கப்படும் கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். அப்போது மலையில் கடும் நெரிசல் ஏற்படும்.இது தொடர்பாக, சாமுண்டி மலையில் உள்ள ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் உட்பட அதிகாரிகள், ஜூலை 7ல் ஆய்வு செய்தனர்.இதைத் தொடர்ந்து, ஆஷாடா வெள்ளிக்கிழமைகளான ஜூலை 12, 19, 26 ஆகஸ்ட் 2 மற்றும் சாமுண்டீஸ்வரி ஜனன தினமான ஜூலை 27 ஆகிய தேதிகளில், தனியார் வாகனங்கள், சாமுண்டி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினங்களில், மலை அடிவாரத்தில் லலித மஹால் அரண்மனை அருகில் உள்ள மைதானத்தில் தனியார் வாகனங்களை நிறுத்த வேண்டும். இங்கு 1,000 நான்கு சக்கர வாகனங்கள்; 2,000 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.இங்கிருந்து மலைக்கு, அரசு பஸ்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. பயணியர், இந்த பஸ்சில் தான் மலைக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் செய்த பின், மீண்டும் பஸ்சில் அடிவாரத்துக்கு வர வேண்டும். யாருக்கும் சிறப்பு பாஸ்கள் வழங்கப்படாது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை