உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீகங்கம்மா தேவி கோவிலில் கரக திருவிழா  நாளை ஆரம்பம்

ஸ்ரீகங்கம்மா தேவி கோவிலில் கரக திருவிழா  நாளை ஆரம்பம்

மல்லேஸ்வரம், : மல்லேஸ்வரம் கோதண்டராமபுரத்தில் உள்ள ஸ்ரீகங்கம்மா தேவி கோவிலில் 96வது ஆண்டு கரக திருவிழா நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.மல்லேஸ்வரம் கோதண்டராமபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீகங்கம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 96வது ஆண்டு கரக திருவிழா, 10, 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. நாளை மாலை 5:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. ஸ்ரீசாய் சதுக்க மாரம்மா கோவிலில் இருந்து புறப்படும் பால்குட ஊர்வலம், இரவு 7:00 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.வரும் 11ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஹா மங்களாரத்தி; மதியம் 12:00 மணிக்கு கும்ப நெய்வேத்யம், மஹா மங்களாரத்தி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு கோவில் முன் இருந்து, கரக ஊர்வலம் புறப்படுகிறது. கோதண்டராமபுரம், வயாலிகாவல், மல்லேஸ்வரம் வழியாக, 12ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு ஊர்வலம் கோவிலுக்கு வருகிறது.வரும் 12ம் தேதி காலை 9:30 மணிக்கு, கோவிலில் சுமங்கலி பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு கோதண்டராமபுரத்தில் உள்ள, மாநகராட்சி அரசு பள்ளி மைதானத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.கோவில் முன் இருந்து புறப்படும் அம்மன் வீற்றிருக்கும் தேர், கோதண்டராமபுரம் மெயின் ரோடு, வயாலிகாவல், குட்டதஹள்ளி மெயின் ரோடு, மல்லேஸ்வரம் 8வது கிராஸ், சம்பிகே மெயின் ரோடு, காடு மல்லேஸ்வரா கோவில் வழியாக சென்று, 13ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவிலுக்கு வந்தடைகிறது.அன்று இரவு 7:00 மணிக்கு, கோவில் முன் இருந்து, கரக ஊர்வலம் புறப்படுகிறது. சம்பிகே மெயின் ரோடு, மல்லேஸ்வரம், வயாலிகாவல், குட்டதஹள்ளி பகுதிகள் வழியாக சென்று, 13ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ