உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கில் வெற்றி தினம் : அஞ்சலி நிகழ்வில் முஷாரப் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை

கார்கில் வெற்றி தினம் : அஞ்சலி நிகழ்வில் முஷாரப் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆழப்புலா: கார்கில் வெற்றி தின அஞ்சலி நிகழ்வு பெயர் பட்டியலில் மறைந்த பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் பெயர் இடம் பெற்ற சம்பவம் கேரளாவில் நடந்தது. கேரள மாநிலம் ஆழப்புலாவில் தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25ம் ஆண்டு வெற்றி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சி நிரல் கடிதத்தில் நம் ராணுவ உயரதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் பெயர் பட்டியலில் பாக்., முன்னாள் சர்வாதிகாரியும், ராணுவ ஜெனரலுமான பர்வேஷ் முஷாரப் பெயர் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1999-ம் ஆண்டு கார்கில் பகுதியில் பாக்., ராணுவத்தினரை ஊடுருவ உத்தரவிட்டதே அப்போதைய ராணுவ தளபதி முஷாரப்பின் பெயர் இடம் பெற்றிருப்பது வெட்க கேடு என கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தவறுதலாக முஷாரப் பெயரை சேர்த்துவிட்டதாகவும் தவறை திருத்திக்கொள்வதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிவன் செந்தில்
ஜூலை 28, 2024 15:11

போட்டோ


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 10:14

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு பாஜக மீது கடுங்கோபம் உண்டு.. பல ஆண்டுகளாக ......


Swaminathan L
ஜூலை 28, 2024 10:10

நிகழ்ச்சி நிரல் கடிதத்தைத் தயாரித்தவர், ப்ரூஃப் பார்த்தவர் விஷமத்தனம் இது. தெரிந்தே செய்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் கூட இதைக் கண்டு கொள்ளவில்லை என்கிறபோது இது தவறுதலாக நிகழ்ந்ததே அல்ல.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2024 09:34

அப்படி எழுதியவர்களின் கரு உருவாவதற்கு முன்னர் பாகிஸ்தானியர்கள் அந்த ஊருக்கு வந்து சென்றிருப்பார்கள் போல


Kasimani Baskaran
ஜூலை 28, 2024 07:39

கம்மிகள் எப்பேர்ப்பட்ட பொய்களை வேண்டுமானாலும் உண்மை என்பது போல ஊடகங்கள் மூலம் பரப்பி பொதுமக்களை மூளைச்சலவை செய்து தயார் செய்து வைத்திருப்பார்கள். இது தமிழகத்தில் என்றால் சீன ராக்கெட் மற்றும் கொடியைகூட தீம்க்கா விளம்பரத்தில் பார்க்கலாம். தேசவிரோதிகளை நாடு கடத்த வேண்டும்.


Kundalakesi
ஜூலை 28, 2024 07:31

தேச துரோகமா இதை கருதி குற்றம் செய்தவரை கைது செய்ய வேண்டும்


P Sundaramurthy
ஜூலை 28, 2024 06:44

கற்றதினால் ஆய பயன் என் ?.... "படிப்பதால் ஏதும் பயன் இல்லை" வள்ளுவரே சொல்லிவிட்டார் யாரும் படிக்காதீர்கள் என்பதை பொன்றிக்கிறது கார்கில் கதையை முழுமையாக சொன்னால் நல்லது ....தவிர்த்திருக்கவேண்டிய போரை ...


Mali
ஜூலை 28, 2024 06:14

இது என்னடா நம்ம உண்டியல் குலுக்கிகே வந்த சோதனை, அரசு ஊழியருக்கு சம்பளம் / PF கொடுக்க திராணி இல்ல, ரெண்டாவது முறையும் நம்ம கட்சியே கடந்த லோக்சபா தேர்தலில் 1 இடம் தான் வெற்றி கிடைச்சது. மக்கள் எங்க அரசை குத்தம் சொல்லவே மனசிலே நினைக்கவே கூடாது. அதனால இப்படி ஒரு மடை மாற்றும் வேலை. எங்க ஊருல மழை பெய்தால் பெரியார் அணை உடையும். நீங்களும் உங்க செத்து போன கம்யூனிஸ்ட் சித்தாந்தமும்.


xyzabc
ஜூலை 28, 2024 03:18

This is not right and to be condemned


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை