மேலும் செய்திகள்
தங்கம் விலை மேலும் 15% சரிந்தால் நிதி நிறுவனங்களில் நெருக்கடி
6 hour(s) ago | 6
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது
10 hour(s) ago | 8
அரசு ஊழியர் வீட்டில் 10 சவரன் திருட்டு
10 hour(s) ago
பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை இரண்டு தொகுதிகளுக்கு பா.ஜ., - காங் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.கர்நாடகாவில் சட்ட மேலவையின் வட கிழக்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர், கர்நாடக தென் மேற்கு ஆசிரியர், கர்நாடக தென் மேற்கு பட்டதாரி, தெற்கு ஆசிரியர் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.ஆளுங்கட்சியான காங்கிரஸ், ஆறு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பா.ஜ., - 5, ம.ஜ.த., - 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக கருதப்பட்டது. அதன்படி, பா.ஜ., ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது.ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்ட கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளராக போஜேகவுடா களமிறக்கப்பட்டுள்ளார்.ஆனால், தெற்கு ஆசிரியர் தொகுதியும் தங்களுக்கு விட்டுக் கொடுக்கும்படி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோருடன், முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதற்கிடையில், பா.ஜ.,வின் பெங்களூரு பட்டதாரி தொகுதி வேட்பாளர் அ.தேவகவுடா, கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளர் ஒய்.ஏ.நாராயணசாமி ஆகியோர், தேர்தல் அதிகாரி செல்வமணியிடம் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.அப்போது, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ். எம்.பி., பி.சி.மோகன் உடனிருந்தனர்.இதுபோன்று, காங்கிரசின் பெங்களூரு பட்டதாரி தொகுதி வேட்பாளர் ராமோஜி கவுடா, கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளர் சீனிவாஸ் ஆகியோரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.அப்போது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, முனியப்பா, மது பங்காரப்பா, எம்.பி., சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி இம்முறை லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. அனைத்து தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போன்று சட்ட மேலவை தேர்தலிலும், இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.- விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,இம்முறை ஆறு மாதங்களுக்கு முன்பே, சட்ட மேலவை தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்தோம். எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதி. வாக்காளர்களை நேரில் சந்தித்து ஓட்டுப் போடும்படி வேட்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.- சித்தராமையா, முதல்வர்
6 hour(s) ago | 6
10 hour(s) ago | 8
10 hour(s) ago