உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நியமனம்

கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நியமனம்

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக ராதா மோகன் தாஸ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக இருந்தவர் அருண் சிங். இவரது தலைமையில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்தித்தது. ஆனால், 66 இடங்களில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது.இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்காக கர்நாடக பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வால், நியமிக்கப்பட்டிருந்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் பா.ஜ., 17 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது, கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வாலை நியமித்து, கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று உத்தரவிட்டார். இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ