உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா அரசு முடிவு: ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு

கர்நாடகா அரசு முடிவு: ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழில் துறையினர் தங்கள் மாநிலத்தில் வருமாறு ஆந்திரா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது கர்நாடகா அரசின் முடிவுக்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கர்நாடகாவின் முடிவால் பக்கத்து மாநிலமான ஆந்திர அரசு, நாஸ்காம் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sankara Subramaniam
ஜூலை 18, 2024 15:52

சரியான தருணம் வாழ்க நாயுடுகாரு


Swaminathan L
ஜூலை 18, 2024 11:06

நாயுடுவின் வேகம் பிரமாதம். இருந்தும், கர்நாடக அரசு இந்த சட்டத்தை அமுல்படுத்தப் போவதில்லை. ஏதாவது சாக்குச் சொல்லி இந்தச் சட்டத்தை உடைப்பில் போடும். இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவது அவ்வளவு எளிது அல்ல. கார்ப்பொரேட் ஸெக்டரின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்.


great kamesh single man
ஜூலை 18, 2024 07:03

ஆந்திராவில் அமராவதி தலைநகரங்களில் உருவாக்குவதில் ஆந்திரா பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பல முன்னெடுப்பு எடுத்து வருகிறது ஐதராபாத் நகரம் சைபராபாத் என்ற பெயர் காரணம் அவர் தான் 1999-2003 ஆகிய காலகட்டத்தில் ஐதராபாத்தில் பல ஜ.டி தொழில்நுட்ப கட்டமைப்புகள் பூங்காக்கள் எல்லாம் அவரு தான் கொண்டு வந்தார் ஆந்திராவில் மாநில முழுவதும் ஜடி பூங்காக்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளார் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மாவட்டம் ஒரு ஜ.டி பார்க் கொண்டு வர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கும் மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..


Easwar Kamal
ஜூலை 17, 2024 22:42

நாயுடு போன்ற அரசியல் தலைவர் நாட்டுக்கு தேவை. உடனே எப்படி கடை விரைகிறார் என்று பாருங்கள். நம்ம விடியல் அரசு தூங்கு மூஞ்சி அப்பன் மவனுக்கு கிட்டிங் கொடுத்த பேசுவானுவ இல்லாட்டி குப்புற அடிச்சு படுதுகுவனுவ. முன்னாள் அரசும் இவனுங்களுக்கு குறைஞ்சவனுங்க கிடையாது. பிறகு எப்படி நாடு உருப்படும்.


Espionage
ஜூலை 18, 2024 01:13

நமக்குத்தான் சினிமா இருக்குல்ல


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 21:57

இங்குள்ள மக்களுக்கும் பரந்த மனசுதான்..தெலுங்கர் எனத் தெரிந்தும் ஆட்சியையே கொடுத்துள்ளார்கள்.


vijai
ஜூலை 18, 2024 11:35

என் மலையாளி கையில் ஆட்சி கொடுக்கலையா


theruvasagan
ஜூலை 17, 2024 21:56

தனியார் துறையில் அரசியல்வியாதிகள் மூக்கை நுழைச்சா நோஸ் கட்டுதான்.


Kalyanaraman
ஜூலை 17, 2024 20:59

தமிழக அரசின் கவனமெல்லாம் திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதும், எத்தனை நாள் உள்ளே வைக்கலாம் என்பதிலேயே இருக்கிறது.


Velan
ஜூலை 17, 2024 20:55

விடியல் சுவிட் கொடுத்து கொண்டாடுது


Sree
ஜூலை 17, 2024 20:25

இங்கு ஒருத்தர் துண்டு சீட்டுடன் பேசுவரிடம் சொல்லுங்கள் அடுத்த மாமாங்கத்திற்குள் அழைப்பு யாராவது எழுதி கொடுத்தால் படிப்பார் தப்பாக


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி