உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால், சிசோடியா, கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கெஜ்ரிவால், சிசோடியா, கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து கீழ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரினை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.இதில் நடந்துள்ள பண மோடி வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா, பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சியின் கவிதா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இன்று(31.07.2024) வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறையால் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஆக. -09 வரையும், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட வழக்கில் ஆக.13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.அதே போன்று மணீஷ் சிசோடியா, கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 00:40

மோடி ஆட்சியில் இவர்கள் வெளியே வர வாய்ப்பே இல்லை.


R Kay
ஆக 01, 2024 00:05

அந்த முகங்களை பாருங்கள். அப்படியே திஹார் களை ஒவ்வொரு முகத்திலும் வழிகிறது. மாபியா கூட்டம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை