மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago
புதுடில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை, ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிடக்கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது 'சவுத் குரூப்பிடம் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சமாக கேட்டதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது' என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 hour(s) ago | 1
7 hour(s) ago