உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிக்கெட் கட்டணம் வசூலிக்க டிஜிட்டல் வசதி பயணியர் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்

டிக்கெட் கட்டணம் வசூலிக்க டிஜிட்டல் வசதி பயணியர் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்

பெங்களூரு : டிக்கெட் கொடுக்கும்போது, சில்லரை பிரச்னை ஏற்படாமல் இருக்க, டிஜிட்டல் முறையில் பயணியர் கட்டணம் செலுத்த அனுமதியளிக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் வாங்கும்போது, சில்லரை பிரச்னையால் நடத்துனர், பயணியர் இடையே வாக்குவாதங்கள் நடக்கின்றன. சரியான சில்லரை தரும்படி நடத்துனர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.இதே காரணத்தால் கைகலப்பு நடந்த உதாரணங்களும் உள்ளன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் புதிய வசதியை கொண்டு வர, தயாராகி வருகிறது.இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:பஸ்களில் டிக்கெட் தரும்போது, பயணியர் மற்றும் நடத்துனர்கள் இடையே எப்போதும் சண்டை நடக்கிறது. இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது. டிக்கெட்டுக்கான தொகையை, கூகுள் பே, போன் பே, பே.டி.எம்., மூலமாக செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்படும். இதனால் டிக்கெட் பிரச்னைக்கு, தீர்வு கிடைக்கும்.மின்னணு டிக்கெட் இயந்திரங்கள், மாதந்தோறும் தலா 645 ரூபாய் வாடகை அடிப்படையில் வாங்க, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது. வரும் நாட்களில் பயணியர் கூகுள் பே, போன் பே, பே.டி.எம்., மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். புதிய மெஷின்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம்.பஸ்களில் பயணம் செய்யும் பலரிடம், பணம் இருப்பது இல்லை. கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பர். இவர்களுக்கு டிஜிட்டல் பே மென்ட் நடைமுறை, உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி