உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியா நிலத்தில் நாற்று நடும் குமாரசாமி

மாண்டியா நிலத்தில் நாற்று நடும் குமாரசாமி

மாண்டியா : மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, வரும் 11ல் சீதாபுரா கிராமத்தில் நாற்று நடுகிறார்.கடந்த 2018ல், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில், முதல்வராக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை துவக்கி வைத்தார். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளாக, மாநிலத்தில் மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சி நிலவியது. பயிரிட முடியவில்லை.பயிரிடப்பட்ட விளைச்சல்களும் நீரின்றி வாடின. ஆனால் குமாரசாமி முதல்வரான 2018ல், மாநிலத்தில் நல்ல மழை பெய்தது. நிலத்தில் இறங்கி நாற்று நட்டு விவசாயிகளை உற்சாகப்படுத்தினார்.தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சராக உள்ள குமாரசாமி, மீண்டும் நாற்று நட திட்டமிட்டுள்ளார். மாண்டியா, பாண்டவபுராவின், சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில், வரும் 11ல் குமாரசாமி நாற்று நடவுள்ளார். அன்றைய தினம் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த பின், நிலத்தில் இறங்கி நாற்று நடுவார்.தன் தந்தை நாற்று நடும் நிலத்தை, நிகில் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். அவருடன் சில தலைவர்களும் சென்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்