மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
தங்கவயல் : தங்கவயல் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் வரும் செப்டம்பர் 14ல் நடக்கிறது.லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க இரு தரப்பினரையும் அழைத்து, சமரச அடிப்படையில் தீர்வு காண தங்கவயல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கணபதி குருசித்த பாதாமி அழைப்பு விடுத்தார்.தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:தங்கவயல் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 17ல் நடந்த தேசிய அதாலத் கூட்டத்தில் மாவட்டத்தில் தங்கவயல் நீதிமன்றம் முன்னுதாரணமாக விளங்கியது. அப்போது 3,442 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. 3,340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.வரும் செப்டம்பர் 14ல் அடுத்த தேசிய லோக் அதாலத் நடக்கிறது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்வு காண நீதிமன்றத்தை அணுகலாம். செக் மோசடி, வங்கிகளில் பணத் தகராறு, குடும்ப பிரச்னை, மின்கட்டண பிரச்னை உள்ளிட்டவை குறித்து இரு தரப்பினரை அழைத்து தீர்வு காண்பதற்கு லோக் அதாலத் நடக்கிறது. இதில் வழக்கில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.நீதிபதிகள் முசாபர் ஏ. மஞ்சரி, ரஹிமலி மவுலானா சாப் நடாப், வினோத் குமார், ஷேமிதா மற்றும் வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.லோக் அதாலத் குறித்து நீதிபதி கணபதி குருசித்த பாதாமி விளக்கினார். இடம்: தங்கவயல் நீதிமன்றம்.
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2
8 hour(s) ago