உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., அணையில் விரிசல் எம்.எல்.ஏ., ஜலசமாதி மிரட்டல்

மஹா., அணையில் விரிசல் எம்.எல்.ஏ., ஜலசமாதி மிரட்டல்

பெங்களூரு - மஹாராஷ்டிரா அணையில் விரிசல் விட்டுள்ளதால், கர்நாடக எல்லைப்ொபகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. லட்சுமி நாராயணா சுவாமி இதை சரி செய்யாவிட்டால், ஜூன் 3ல் ஜல சமாதி ஆவதாக, உத்தவ் தாக்கரே கோஷ்டியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ., மற்றும் தொண்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பருவ மழை

மஹாராஷ்டிராவின், கொல்லாபுரா மாவட்டத்தில், காளம்மவாடியில் துாத்கங்கா ஆற்றுக்கு குறுக்கே, அணை கட்டப்பட்டுள்ளது.28 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கசிகிறது. இதனால் கர்நாடக எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் வசிக்கின்றனர்.மழைக்காலம் துவங்குகிறது. ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒவ்வோர் மழைக்காலத்திலும், மஹாராஷ்டிராவின் அணைகள் நிரம்பினால், பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கலபுரகி, பெலகாவி உட்பட சில மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறும். மக்கள் அவதிப்படுவர்.மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், காளம்மவாடி அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து அணை நிரம்பினால் உடையும் அபாயம் உள்ளது.

குற்றச்சாட்டு

பெலகாவியின், சிக்கோடி, நிப்பானி தாலுகாக்களின், துாத்கங்கா ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் அபாயத்தில் சிக்குவர். இது தெரிந்தும், மஹாராஷ்டிர அரசு அலட்சியம் காண்பிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அணையை பழுது பார்க்க, மஹாராஷ்டிர அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூன் 3ல் ஜல சமாதி ஆவோம் என, கொல்லாபுரா தெற்கு தொகுதியின் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ., சதேஜ் பாட்டீலும், தொண்டர்களும் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி