உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா, போலீஸ் தவிர எல்லோரும் பார்க்கலாம்! மே.வங்க கவர்னர் சிசிடிவி ஷோ

மம்தா, போலீஸ் தவிர எல்லோரும் பார்க்கலாம்! மே.வங்க கவர்னர் சிசிடிவி ஷோ

கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், கவர்னர் மாளிகையில் சம்பவத்தன்று பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், நேற்று பொதுமக்கள் 100 பேருக்கு காண்பிக்கப்பட்டன.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக உள்ள ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அளிக்கும்படியும் கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என, கவர்னர் ஆனந்த போஸ் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்க, கவர்னர் மாளிகை கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொதுமக்களிடம் காண்பிக்க, கவர்னர் ஆனந்த போஸ் முடிவு செய்திருந்தார். இதன்படி, கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் 100 பேருக்கு, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மே 2ம் தேதி மாலை 5:30 மணி முதல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க போலீசார் தவிர யார் வேண்டுமானாலும் 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகளை காணலாம் என கவர்னர் போஸ் தெரிவித்துள்ளார். அதை காண விரும்புபவர்கள், gmail.comஅல்லது governor-nic.inஎன்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம் அல்லது 033- 2200 1641 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என, கவர்னர் மாளிகை அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

PR Makudeswaran
மே 10, 2024 12:31

குற்றம் சொல்பவரின் யோக்கியதை என்னவென்று ஆராய வேண்டும் அது போல பாரபட்சம் பாராமல் கருத்து எழுத வேண்டும் அதுதான் வள்ளுவர் சொன்னாரே வெட்டி ஒட்டி என்றால்இப்பொழுது தான் விஞ்ஞானம் காட்டி கொடுத்து vidume


Azar Mufeen
மே 10, 2024 12:02

கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைகவில்லை என்றவுடன் திட்டிய கூட்டம் இவர் விஷயத்தில் பல்டி அடிப்பதை பாருங்கள் புகார் கொடுத்து எவ்வளவு நாட்கள் ஆகியது இப்போ வந்துகிட்டு வீடியோ வை தனக்குஏத்தமாதிரி செட் பண்ணிட்டு நான் உத்தமன் என்று கதறுவது இவன் கைது செய்யப்பட்டாலும் உடனே ஜாமீன் கிடைத்துவிடும் கெஜ்ரி அவர்களுக்கு கிடைக்காது ஏனெனில் இவன் பண்ணியது திரும்ப கிடைத்துவிடும் கெஜ்ரி அவர்கள் பண்ணியது சம்பாதிக்க முடியாது


Logu
மே 10, 2024 16:21

மூர்க்கனுக்கும் கொத்தடிமைக்கும் மூளை வேலை செய்யாது என்பது தெரிகிறது


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 10:04

ஊரை ஏமாற்றும் நாடகம் தான் யோக்கியன் என்றால் விசாரணைக்கு ஒத்துழைக்க என்ன தயக்கம் ?


Barakat Ali
மே 10, 2024 11:13

தமிழக அமைச்சர்களின் வழக்குகளை வெளிமாநிலத்தில் விசாரிக்கக் கூடாது ன்னு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செஞ்சுதே அதுக்கும் இப்படி கருத்து போடுங்களேன்


ஜெய்ஹிந்த்புரம்
மே 10, 2024 06:55

பாத்ரூமிலும், பெட்ரூமிலும் கூடவா சிசிடிவி இருக்கு?


Duruvesan
மே 10, 2024 16:33

அது உன்னை போல் வக்கிர புத்தி உள்ள மூர்க்கன் வெப்பன்


Kasimani Baskaran
மே 10, 2024 05:37

மாடலை பின்பற்றினால் எல்லா கவர்னர்களும் இரவி போல ஆகிவிடுகிறார்கள் ஒருவேளை மாடலை கவர்னர்களின் முதலாளியான ஜனாதிபதி வெறுக்கிறாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது எப்படியாவது திராவிடத்துக்கு கட்டம் கட்டினால் நாட்டுக்கு நல்லது அதைப்பார்த்து நாலு பேர் திருந்துவார்கள்


sankaranarayanan
மே 10, 2024 04:40

மமதையில் வாயை மூடிவிட்டார் ஆளுநர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவறானதால் சரியான போட்டி வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்திற்குப்பிறகு அரசியல் சினிமா இப்போதுதான் மேற்கு வங்கத்தில் அரசியலிலும் சூடு கட்டியுள்ளது சபாஷ் சபாஷ் சபாஷ் தொடரட்டும்


Velan Iyengaar
மே 10, 2024 07:46

புகார் அளிக்கப்பட்டிருக்கு உண்மையா பொய்யா என்று கண்டறிய விசாரணை நிச்சயம் தேவை சட்டத்திற்கு அப்பற்பட்டவரல்ல கெவுனர் மேலும் கெவுனர் மாளிகை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவும் தடை போட்டிருக்கார் மடியில் கணம் இல்லையெனில் எதற்கு இத்தனை பயம் ?? இவர் வெட்டி ஒட்டி போட்ட வீடியோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி