உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துாய்மை பணியாளருக்கு மிரட்டல் கந்து வட்டி வசூலித்தவர் கைது

துாய்மை பணியாளருக்கு மிரட்டல் கந்து வட்டி வசூலித்தவர் கைது

ஆர்.கே.நகர், சென்னை, கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரை சேர்ந்தவர் கொண்டைய்யா, 58. இவர், 34வது வார்டில், 27 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், இந்தாண்டு ஜன., 10ல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:கொருக்குப்பேட்டை, சிகிரிந்தபாளையத்தை சேர்ந்த 'கந்து வட்டி' முருகனிடம், 10 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி, திருப்பி செலுத்தி வந்தேன். சில நேரத்தில் பணம் கட்ட முடியாததால், வட்டிக்கு மேல் வட்டி, அதற்கும் கூட்டு வட்டி என, கணக்கு எழுதி தற்போது, 14 லட்ச ரூபாய் தர வேண்டுமென, என் குடும்பத்தினரிடம், முருகன் மிரட்ட, கையெழுத்து வாங்கி, கடன் பத்திரம் பதிவு செய்துள்ளார். வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை முருகன் பிடிங்கிக் கொண்டார். என்னிடம் கூறாமல் கடந்த மாதம், மூன்று லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என, மிரட்டுகிறார்.ஐந்து ஆண்டுகளாக என் சம்பள பணத்தை அவர் எடுத்து விடுவதால், குப்பையில் கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு, குடும்பத்தை நடத்தி வருகிறேன். முருகன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கந்து வட்டி வசூலித்தது உறுதியானதால், முருகனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை