உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவு

உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில், அதில் உள்ள சத்துக்கள் தொடர்பான விபரங்கள் பெரிய எழுத்தில் இடம்பெற வேண்டும் என்ற திருத்தத்துக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உணவு பொருட்கள் தொடர்பான தவறான, திசை திருப்பும் வகையிலான தகவல்களை வெளியிடுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களில், ஊட்டச்சத்து பானம் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்தது. அதுபோல, 100 சதவீதம் பழரசம் என்பதை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.இந்த வகையில், நுகர்வோருக்கு உண்மையான தகவல்கள் கிடைப்பதையும், உடல்நல பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், தற்போது புதிய முடிவை, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எடுத்துள்ளது.அதன்படி, பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில், அதில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள் பெரிய எழுத்துகளில் இடம்பெற வேண்டும். குறிப்பாக, அதில் உள்ள சர்க்கரை, உப்பு போன்றவற்றின் அளவு குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.இது தொடர்பான அறிவிப்பாணை, அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAAJ68
ஜூலை 08, 2024 17:21

என்ன விலை என்பதை பெரிய எழுத்தில் போடச் சொல்லுங்கள். தேடி த்தேடி க்கண்டுபிடிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது . கண்ணாடி போட்டு பார்த்தாலும் கண்டு பிடிப்பது கடினம்.


Lion Drsekar
ஜூலை 08, 2024 11:31

இதே போன்று சாராயக்கடைகளில் அரசாங்கமே விற்கும் தரமற்ற சாராய பாட்டிலில் , பெரிய ழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? அரசாங்கம் இரயில் பேருந்து டிக்கட்டுகள் வாங்கி விபத்து ஏற்பட்டால் எவ்வளவு இழப்பீடு கொடுப்பார்கள் , அதை எப்படி பெறவேண்டும் என்று பெரிய எழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? காஸ் சிலிண்டர் விபத்தில் இறந்தால் எத்தினை லட்சம் இழப்பீடு கொடுப்பார்கள் என்று பெரிய எழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா அவைகளும் மக்களின் குறிப்பாக ஏழைகளின் உரிமை, யாராலும் எதுவுமே அறிந்து உள்ள முடியாத நிலையில் எந்த ஒரு இழப்பீடும் இல்லாமல் இருக்கின்றனர் . அதே போன்று மின்சாரத்துறையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரீடிங் எடுத்து மக்களை ஏமாற்றுவது ஏன் ? அதே போன்று மின்சார உபயோகம் மற்றும் இதர என்று புரியாத நிலையில் மாதம் மாதம் பல ஆயிரம் மொத்தத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டினால் பல லட்சம் கோடி அதிக அளவில் வேண்டும் என்றே கொள்ளை அடிக்கிறார்கள் . எவ்வளவு யூனிட் பயன் டுத்தினார்களோ அதற்க்கு கணக்கிட்டு வசூலித்தால் பரவாயில்லை, பிறகு கிலோவாட்டுக்கு இத்தனை , மற்றும் புரியாத கணக்கில் பல ஆயிரம் ஒவ்வொரு ஈட்டுக்கும் வாங்குவது எந்த விதத்தில் நியாயம் அதையும் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவ பிறப்பிக்க முடியுமா ? எல்லோருமே சொல்வது ன்று செய்வது ஒன்றுமாகத்தான் இருக்கிறார்கள். வந்தே மாதரம்


ellar
ஜூலை 08, 2024 10:57

இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் பொருட்களை வாங்கும் பாமர அல்லது நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றும் இன்னும் சில சமாச்சாரங்களையும் தெளிவாக வெளியிட வைக்க வேண்டும் 1. பாக்கிங் செய்யும் பொருளின் தன்மைக்கு ஏற்ப அளவை நிர்ணயித்து அந்த அளவுகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதித்தால் விலையை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும் 2. பதப்படுத்தப்பட்ட பொருட்களில் உபயோகிக்கப்படும் ரசாயனங்கள் குறியீடு என் வாயிலாக தெரிவிக்கப்படாமல் அதனுடைய ரசாயன பெயரில் தெரிவிக்கப்பட வேண்டும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்பதற்கு அரசு பரிசோதனைகளை அதிகப்படுத்தி உண்மை நிலையை நிலை நாட்ட வேண்டும்


GMM
ஜூலை 08, 2024 07:00

பொருட்கள் போக்கில் பொருள் ஆயுள் தேதி, விலை விவரம் மொத்த பரப்பில் தெளிவாக தெரியும் படி, சுமார் 10 சதவீதம் மேல் இருக்க வேண்டும். மின் சாதன பொருட்களில் முக்கிய விவரம் இருக்க வேண்டும். அந்த பகுதி வெண்மையாக இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 08, 2024 05:28

நல்ல முயற்சி. உண்மைகளை படித்துப்பார்த்தால் பல குளிர்பானங்கள் உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது வேறு வித பிரச்சினைகள் வருவதற்காகவே உற்பத்தி செய்தது போல உணர்வீர்கள். ஒரு கோக் கேனில் 35 கிராம் 9 கரண்டி அளவுக்கு சர்க்கரை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?


Natarajan Ramanathan
ஜூலை 08, 2024 03:44

விபரங்கள் தெளிவாக வெள்ளை நிறத்தில் கருப்பு மையில் அச்சிட வேண்டும். அதுபோலவே அனைத்து பாக்கெட்டுகளும் பத்து, இருபது, இருபது ஐந்து, ஐம்பது, நூறு, ஐநூறு, அல்லது ஒருகிலோ என்ற மெட்ரிக் அளவுகளில் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ