உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்துகிறார் மனு பாகர்; பதக்க மங்கைக்கு கவுரவம்!

ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்துகிறார் மனு பாகர்; பதக்க மங்கைக்கு கவுரவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: இந்தியாவின் பதக்க மங்கை மனு பாகர், ஒலிம்பிக் தொடர் நிறைவு விழாவில் மூவர்ணக்கொடியை ஏந்தி செல்கிறார்.

2 பதக்கங்கள்

பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. பல்வேறு நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி குவிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாரிஸ் சென்ற இந்திய ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் 2 பதக்கங்களை வென்று அசத்தினார். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்து நாட்டுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

மூவர்ணக்கொடி

இந் நிலையில், ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா வரும் 11ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. அந்த விழாவில் இந்திய நாட்டின் தரப்பில் பதக்க மங்கை மனு பாகர் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விரைவில் ஒப்புதல்

இந்திய ஒலிம்பிக் சங்கம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வெகு விரைவில் உரிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Apposthalan samlin
ஆக 04, 2024 11:05

இந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் மக்கள் தொகையில் முதலில் இருந்து ஒரு தங்க பதக்கம் கூட வாங்க முடியவில்லை என்று நினைக்கும் பொழுது எந்த அளவு இந்தியா ஊழலில் உள்ளது .அரசியல் தலையீடு தான் காரணம் இதே நிலைமை தான் நம் பொருளாதாரமும் இருக்கிறது காங்கிரஸ் தான் ஊழல் என்றால் அதை விட பெரிய ஊழல் பிஜேபி அரசாங்கம் .


swega
ஆக 04, 2024 10:42

இந்த பெண்ணை யாரென்றே தெரியாத நிலையில் இந்த பெண்ணால் சாதிக்க முடிந்தது. இந்த மீடியாவும் சோசியல் மீடியாவும் சேர்ந்து நேஷனல் க்ரஷ் அப்படின்னு உருட்டியே கவித்திட்டானுக. சோசியல் மீடியாவிலையும் இந்த பெண்ணின் அலப்பறை தாங்க முடியலை


Kasimani Baskaran
ஆக 04, 2024 07:02

அருமை. மூன்றாவது பதக்கம் கூட வாங்கி சரித்திரம் படைப்பார் என்று எதிர்பார்த்தேன்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை