மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago
புதுடில்லி:மவுஜ்பூர் - மஜ்லிஷ் பார்க் இடையே உயர்த்தப்பட்ட வழித்தட கட்டுமானப் பணிகளை டி.எம்.ஆர்.சி., எனப்படும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.கோகுல்புரியிலிருந்து சூர்காட் வரையிலான 4ம் கட்ட மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மவுஜ்பூர் - மஜ்லிஷ் பார்க் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே எட்டு ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. 12.098 கி.மீ., நீளத்திற்கு மொத்தமும் உயர்த்தப்பட்ட வழித்தடத்திலேயே அமைகிறது.இந்த பணியின் நிலை குறித்து, டி.எம்.ஆர்.சி., நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அவருடன் மெட்ரோ ரயில் அதிகாரிகள் உடன் சென்றனர்.மெட்ரோ, பொதுப்பணித்துறை ஒருங்கிணைப்புடன் கட்டப்பட்டு வரும் சூர்காட், பஜன்புரா நிலையங்களையும் அவர் பார்வையிட்டார். கோகுல்புரியில் கட்டப்பட்டு வரும் பாலத்தையும் பார்வையிட்ட அவர், நடைபாதையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.இதுகுறித்து டி.எம்.ஆர்.சி., தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago